பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் முன்னிலையில் தனலட்சுமிக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது. அதாவது கடந்த வாரம் முழுக்க சண்டையும், ரணகளமுமாக பிக் பாஸ் வீடு சென்றது. இதில் பெரும்பாலான சண்டைகளில் தனலட்சுமி ஈடுபட்டிருந்தார்.
இந்த சூழலில் ஸ்வீட் ஃபேக்டரி டாஸ்கில் அதிக பணம் வைத்திருந்ததால் தனலட்சுமி அந்த போட்டியில் வெற்றி பெற்றார். அதுமட்டுமின்றி அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து தனலட்சுமி காப்பாற்றப்பட்டு உள்ளார். இவருக்கு எதிராக அணியாக இருந்த விக்ரமன் தோல்வி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆண்டவர் முன்னிலையில் ஒரு குறும்படம் போடப்பட்டது. அதில் தனலட்சுமி திருட்டு தானமாக தான் அந்த பணத்தை சம்பாதித்தார் என்பது ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இதை பார்த்து தனலட்சுமி உட்பட அனைத்து பிக் பாஸ் போட்டியளாளர்களும் சிரித்தனர்.
ஆனால் கமல்ஹாசன் உங்களைப்போல் நானும் சிரித்துக் கொண்டு போனால் இது மிகப்பெரிய தவறாக மாறிவிடும். நியாயமாகவும், உண்மையாகவும் விளையாண்ட விக்ரமன் தான் அந்தப் போட்டியின் சரியான வெற்றியாளர் என்று தனலட்சுமி இடமிருந்து பறிக்கப்பட்டு விக்ரமனுக்கு அந்த வெற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து விக்ரமன் காப்பாற்றப்படுகிறார் என்றும் கமல் அறிவித்துள்ளார். தனலட்சுமி உடனே கண்ணீர் மல்க அழுகிறார். அப்போது கமல் தனலட்சுமி அழுதால் ஆறுதல் கூறுவதும் நான் தான் என சில அறிவுரை கூறுகிறார்.
விளையாட்டாக இருந்தாலும் அதில் ஒரு நேர்மையும், நியாயமும் இருக்க வேண்டும் என்பதை பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் இதன் மூலம் கமல் கூறி உள்ளார். மேலும் நாளுக்கு நாள் தனலட்சுமி செயல் ரசிகர்களை எரிச்சல் ஊட்டும் அளவுக்கு சென்று கொண்டே இருக்கிறது.