Director Shankar: இயக்குனர் சங்கர் இயக்கிய படங்கள் அனைத்தும் மிகப் பிரம்மாண்டமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடும். அந்த வகையில் எத்தனையோ படங்கள் இருந்தாலும், இப்போது வரை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்றால் அது கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படம் தான். அதனாலேயே இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் படக்குழு இறங்கினார்கள்.
அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாளிலேயே பல பிரச்சினைகள் வந்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்படியே கொஞ்சம் வருடமாக கிடப்பில் போடப்பட்டு, கடந்த ஆண்டு தான் தூசி தட்டப்பட்டது. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கூடிய விரைவில் ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
எப்படியும் பொங்கலுக்கு ரிலீசாகி விடும் என்று செய்திகள் பரவி வந்தது. அதன் பின் இன்னும் கொஞ்சம் வேலைகள் இருப்பதால் ஏப்ரல், மே வெளியாகும் என்று கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வெறுப்பாகி வரும் போதே வரட்டும் என்ற நிலைமைக்கு தயாராகி விட்டார்கள்.
ஆனால் தற்போது வந்த தகவலின் படி இப்படத்தின் சிஜி வேலைகள் அதிகமாக இருப்பதால் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் தான் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது என்னடா இந்தியன் 2வுக்கு வந்த சோதனையா அல்லது ஷங்கருக்கு வந்த சோதனையை என்று புலம்பும் படி அடி மேல் அடி வாங்கும் நிலைமைக்கு ஆளாகி விட்டார்.
இந்த படம் தான் இப்படி இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது என்றால் ராம்சரண் நடிப்பில் சங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படமும் இப்போதைக்கு வருவதாக தெரியவில்லை. அதற்கு பண பிரச்சினை இருப்பதால் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. அட்லீஸ்ட் இந்த படத்தையாவது வெளியிட்டு இருந்தால் கொஞ்சமாவது இயக்குனருக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.
ஆனால் இப்படி இவர் இயக்கிய இரண்டு படங்களுமே அந்தரத்தில் தொங்கிக் இயக்குனருக்கு திரும்புகிற இடமெல்லாம் கன்னிவெடி மாதிரி கொடுமையை அனுபவித்து வருகிறார். அதனால் இப்போதைக்கு இந்தியன் 2 படத்தை யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.