அந்த மாதிரி கமல் படங்களில் நடிப்பது ரொம்ப கஷ்டம்.. நடிப்பு அசுரன் வியந்து பார்த்த கதாபாத்திரம்

கமல் பன்முக திறமை கொண்ட ஒரு முழுமையான கலைஞர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவரிடம் நடிப்பு, நடனம், பாட்டு, இயக்கம் என அனைத்திலும் வல்லமை பெற்று நினைத்ததை செய்து முடிக்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். இவரை ரோல் மாடலாக நினைத்து நிறைய பேர் திரை உலகிற்கு அடி எடுத்து வைக்கிறார்கள்.

அந்த வகையில் வளர்ந்த முன்னணி நடிகர் ஒருவர் இவரைப் பற்றி மிகவும் பாராட்டி இவர் நடித்த படங்களில் இவரை மாதிரி நடிப்பது மிகவும் கஷ்டம் என்று கூறி இருக்கிறார். அந்த நடிகர் வேறு யாருமில்லை அசுர வேகத்தில் நடிப்பை வெளிக்காட்டி நடித்து வரும் தனுஷ் தான். இவர் வியந்து பார்த்த கமலின் படங்கள் மைக்கேல் மதன் காமராஜன், தெனாலி மற்றும் குணா போன்ற படங்களை பற்றி மிகவும் பெருமிதமாக பேசி இருக்கிறார்.

1990 ஆம் ஆண்டு சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன் காமராஜன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்திருப்பார். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஏற்ற மாதிரி இவரை மாற்றிக் கொண்டு கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நடித்திருப்பார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது மற்றும் திரையரங்கில் 175 நாட்களுக்கு ஓடி வெள்ளி விழா கண்ட படமாக ஆனது.

இந்த படத்திற்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் குணா திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் கமலின் நடிப்பை பார்த்து இந்த மாதிரி நடிப்பதற்கு சத்தியமாக என்னால் முடியாது அந்த அளவிற்கு கமல் அவர்கள் கதையை உள்வாங்கி நடித்து இருப்பார். மேலும் இந்த படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து நான் மிகவும் வியந்து போய் இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

பின்பு கமலின் நடிப்பில் நகைச்சுவையாக வெளிவந்த தெனாலி படத்தை பற்றி மிகவும் பெருமிதமாக பாராட்டி இருக்கிறார். தெனாலி படம் காமெடியான படம் என்றாலும் கூட அந்த படத்தில் அவரை மாதிரி நடிக்கிறது ரொம்பவும் கஷ்டம். அந்த அளவிற்கு தெனாலி படத்தில் நகைச்சுவையான தோற்றத்துடனும் நடித்திருப்பார். அதற்கு தனுஷ் கண்டிப்பாக அவருக்கு தேசிய விருதை கொடுத்து ஆகணும் என்று கூறியிருக்கிறார்.

இப்படி இவர் மட்டுமல்லாமல் இவரை பார்த்து வியந்த நடிகர்கள் அதிகமானவர் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு நடிப்பை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரியும் தன் நடிப்பை வெளிக்காட்டி நடிப்பதில் சகலகலா வல்லவன் என்றே கூறலாம். கமல் அப்படி நடிப்பை வெளிக்காட்டியது தான் இப்பொழுது ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.