Jailer Leo: ஜெயிலர் படம் இப்போது வசூலை வாரி குவித்து வருகிறது. ஒரு வாரத்தை கடந்த நிலையில் கிட்டதட்ட 400 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. ரஜினியின் படங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு வசூலில் பெரும் தொகையை லாபமாக பெற்று வருகிறது. ஜெயிலர் வசூலை விஜய்யின் லியோ படத்தால் தான் முறியடிக்க முடியும் என பேசப்படுகிறது.
ஆனால் ஒருபுறம் ரஜினியின் வசூலை விஜய்யால் முறியடிக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் ஜெயிலர் படத்திற்கு போட்டியாக தமிழ் சினிமாவில் வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை. மற்ற மொழியை எடுத்துக் கொண்டால் தெலுங்கில் சிரஞ்சீவியின் போலா சங்கர் படம் வெளியாகி இருந்தது.
இந்த படமும் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் வசூலில் டல் அடித்து விட்டது. ஆகையால் ஜெயிலர் படம் தனிக்காட்டு ராஜாவாக வசூலை வாரி குவித்து வந்தது. ஆனால் லியோ படத்திற்கு போட்டியாக முன்னணி பிரபலங்களின் படங்கள் வெளியாக இருக்கிறது. ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு லியோ படம் வெளியாகிறது.
ஆனால் அந்த நாளில் மற்ற மொழியில் உள்ள டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகிறது. ஜெயிலர் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் சிவராஜ் குமார். இவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் கோஸ்ட் படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இதனால் இந்த படத்திற்கு கன்னட திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தெலுங்கில் ரவிதேஜாவின் நடிப்பில் டைகர் நாகேஷ்வர ராவ் என்ற படம் உருவாகியுள்ள நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி இப்படம் ரிலீஸாக இருக்கிறது. தெலுங்கில் மாஸ் காட்டி வருகிறார் பாலகிருஷ்ணா.
ஆரம்பத்தில் ஜெயிலர் படத்தில் கூட இவர் நடிப்பதாக இருந்தது என நெல்சன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இவருடைய பகவந்த் கேசரி என்ற படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு ஒவ்வொரு மொழியிலும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால், ஜெயிலர் படத்தின் வசூல் லியோ முறியடிக்குமா என்பது சந்தேகம்தான்.