1. Home
  2. கோலிவுட்

பார்க்க தான் காமெடி பீஸ், நிஜத்தில் கோடீஸ்வரன்.. கலாநிதியை விட காஸ்ட்லி காரை வைத்திருக்கும் ஜெயிலர் பிரபலம்

பார்க்க தான் காமெடி பீஸ், நிஜத்தில் கோடீஸ்வரன்.. கலாநிதியை விட காஸ்ட்லி காரை வைத்திருக்கும் ஜெயிலர் பிரபலம்
கலாநிதியிடம் கூட இல்லாத வெளிநாட்டு காரை வைத்திருக்கும் ஜெயிலர் பட பிரபலம்.

Kalanithi Maran: ஒருவரை திரையில் பார்ப்பதற்கும், நிஜ வாழ்க்கையிலும் மொத்தமாகவே தலைகீழாக இருக்கும். அவ்வாறு ரஜினியின் ஜெயிலர் படத்தில் காமெடி பீஸ்ஸாக நடித்த பிரபலம் ஒருவர் நிஜ வாழ்க்கையில் கோடியில் புரண்ட வருகிறாராம். பலரும் அறியாத இந்த திடுக்கிடும் தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

அதாவது நெல்சனின் பெரும்பான்மையான படங்களில் இவரை காண முடியும். ஆரம்பத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக நெல்சன் உடன் பழகி வருவதால் தன்னுடைய எல்லா படத்திலும் ஒரு சின்ன கதாபாத்திரமாவது கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தவர் தான் ரெடின் கிங்ஸ்லி.

பார்க்க சாதாரண ஆள் என்று இவரை எடை போட்டு விட முடியாது. ஏனென்றால் இவருடைய பின்புலத்தைப் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். தமிழ்நாட்டில் நடக்கும் பொருட்காட்சியில் அரசாங்கத்தை விட கூடுதலாக லாபம் ரெடின் கிங்ஸிலிக்கு தான் கிடைக்கிறதாம்.

ஏனென்றால் பொருட்காட்சியின் ஒட்டுமொத்த குத்தகைக்காரரும் இவர் தானாம். சமீபத்தில் சென்னை அருகே தாம்பரத்தில் வெளிநாட்டு பாலம் என்ற ஒரு பொருட்காட்சி நடத்தப்பட்டது. அது பலமடங்கு லாபத்தை பார்த்திருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. சரியான மூளை வளர்ச்சி உடையவர்தான் இவர். எதை செய்தால் லாபம் கிடைக்கும் என்பதைப் பற்றி நன்றாக தெரிந்தவர்.

இந்தியாவில் மிகவும் பிஸியான நபராக இருக்கும் ரெடின் கிங்ஸ்லி படப்பிடிப்பில் இருக்கும்போது அத்தனை ஃபோன் கால் வந்து கொண்டிருக்கும். ஆனால் வெளியில் ஒரு சாதாரண நபராக தான் தன்னை காட்டிக் கொள்வார். கலாநிதியிடம் இல்லாத வெளிநாட்டு ரக கார் ஒன்றை ரெடின் கிங்ஸ்லி சொந்தமாக வைத்து இருக்கிறார்.

சினிமாவை விட பல தொழில்கள் இருந்து அவருக்கு எக்கச்சக்க வருமானம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை என்றாலும் தனது ஆசைக்காகத்தான் இப்போது படங்களில் நடித்து வருகிறாராம். இந்த விஷயத்தை கேட்ட ரசிகர்கள் இவர் இவ்வளவு திறமைசாலியா ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.