Jailer Tamilnadu Collection Report: சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் இப்போது வரலாறு காணாத வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி வெளியான இப்படம் வெளிவருவதற்கு முன்பு பல விமர்சனங்களை சந்தித்தது. அதிலும் சோசியல் மீடியாக்களில் படம் பற்றி வெளியான நெகட்டிவ் விமர்சனங்கள் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் அதையெல்லாம் அடித்து நொறுக்கும் அளவிற்கு தற்போது ஜெயிலர் வசூல் வேட்டையாடி வருகிறது. உலகம் முழுவதிலும் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தலைவரின் அலப்பறையை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் பல கோடிகளை வாரி குவித்து இருக்கிறது. பொதுவாக சூப்பர்ஸ்டார் படங்களை முதல் நாளே திருவிழா போல் கொண்டாடும் ரசிகர்கள் தற்போது படம் வெளியாகி மூன்று நாள் கடந்த பிறகும் அதே ஆரவாரத்தோடு கொண்டாடுகின்றனர்.
அதன்படி தமிழ்நாட்டில் முதல் நாளிலேயே ஜெயிலர் 30 கோடி வசூலை பெற்றிருந்தது. அதை அடுத்து இரண்டாவது நாளில் 20.25 கோடிகளை தட்டி தூக்கியது. சனிக்கிழமை ஆன நேற்றும் வசூல் அள்ள அள்ள குறையாத வகையில் இருந்தது.
அந்த வகையில் மூன்றாவது நாளில் 26.38 கோடிகளை வசூலித்துள்ளது. ஆக மொத்தம் தமிழகத்தில் மூன்று நாளில் ஜெயிலர் பட கலெக்ஷன் 76.09 கோடியாக இருக்கிறது. இதுதான் தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் மிரள விட்டிருக்கிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமையான இன்று இதன் வசூல் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 15 விடுமுறை தினமாக இருப்பதால் அடுத்த வாரத்திலும் ஜெயிலரின் ருத்ர தாண்டவம் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் ரஜினி மற்றும் நெல்சன் குறித்து வெளிவந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கிறது இந்த வசூல் ரிப்போர்ட்.