பல நாடுகளில் சகித்துக் கொள்ள முடியாத ஜெயிலர் படம்.. பெரிய பஞ்சாயத்தால் வந்த பிரச்சனை

Jailer Movie: பல எதிர்பார்ப்புகளை முன்வைத்து ரஜினி நடிப்பில் திரையரங்கில் வெற்றி நடை போட்டு வரும் படம் தான் ஜெயிலர். மக்களிடையே பல விதமான விமர்சனங்களை மேற்கொண்டு வரும் இப்படம் வெளிநாடுகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி உட்பட பல பிரபலங்களோடு களம் இறங்கிய இப்படத்தை காண மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு ரசிகர்களிடையே பல விமர்சனங்களை உள்ளடக்கி வரும் இப்படம் ரிலீஸ் பொருட்டு கவலைப்படாத ரஜினி ஆன்மீக பயணமாக இமயமலை சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பொதுவாக இங்கே இருக்கும் ரசிகர்களை விட வெளிநாட்டில் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளம். அவ்வாறு இருக்க தற்பொழுது ஜெயிலர் படம் பல நாடுகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இருப்பினும் இப்படி ஓவர் வயலன்ஸ் இருப்பதாக ஒரு பிரச்சனை கிளம்பி உள்ளது ஆகையால் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க வில்லையாம்.

மேலும் யூகே வில் ஒரு படி மேலாக சென்று படத்தின் பாதி வன்முறை காட்சிகளை நீக்கி விட்டார்களாம். தற்போது தன் படத்திற்கு இதுபோன்ற சோதனைகள் எழுந்துள்ள நிலையில் எதை பற்றியும் கவலைப்படாமல் ரஜினி தன் வேலையை செய்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருப்பினும் படத்தின் முதல் பாதை நன்றாக இருந்தாலும் இரண்டாவது பாதை பொறுமையாக செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நெல்சன் கண்டமேனிக்கு படத்தை கட் செய்து ஒரு வழி பண்ணிவிட்டார் எனவும் கூறி வருகின்றனர்.

அதையும் தாண்டி சில நாடுகளில் வெளியிடப்பட்ட தியேட்டர்களில் இடைவெளி காட்சியை ஒளிபரப்ப வில்லையாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உலகெங்கும் ரஜினிக்கு ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் இது போன்ற பிரச்சனை தலைவிரித்து ஆடுவது ஜெயிலர் படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.