பராசக்திக்கு மரண பயத்தை காட்டிய ஜனநாயகன்.. சாதுரியமாக காய் நகர்த்தும் SK

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அதில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

GOAT படத்தில் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கி கொடுத்த காட்சிக்கு பிறகு அவரது மார்க்கெட் செம உயர்ந்தது.அடுத்து வந்த அமரன் திரைப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனால் ரசிகர்கள் அவரை அடுத்த தளபதியாக கொண்டாட ஆரம்பித்தனர்.

அதனால் விஜய்யுடன் நேரடி மோதலை நோக்கி பராசக்தியை மேம்படுத்தினார் சிவகார்த்திகேயன். இப்படம் ஆரம்பத்தில் ஜனநாயகன் படத்துடன் 2026 பொங்கலுக்கு ரிலீசாக திட்டமிடப்பட்டது. ஆனால் நேரடி மோதலால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்ற பீதி இருந்தது.

அதனால் தற்போது பராசக்தி ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளனர். ஜனநாயகன் ஜனவரி 9 அன்று திரைக்கு வரும்போது, அதன்பிறகு 3 நாட்களுக்கு பின்னர் பராசக்தி வெளியாவது 90% உறுதியாகவே இருக்கிறது, ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

பராசக்தியை சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு எதிராக வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். பேசில் ஜோசப், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்.
இது சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாகும். மேலும் மதராசி, வெங்கட் பிரபு, விநாயக் படங்கள் கைவசம் உள்ளன. SK தற்போது ஒரு படத்திற்கு ரூ.70 கோடி சம்பளம் பெறுகிறார்.