Japan – Jigarthanda Double X 3rd Day Collection: தீபாவளி என்றாலே பட்டாசு, புது ஆடை என்பதை காட்டிலும் குடும்பங்களாக தியேட்டருக்கு படையெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனாலையே இதுபோன்ற பண்டிகை நாட்களில் எக்கச்சக்க படங்கள் ரிலீஸ் செய்து தியேட்டர் உரிமையாளர்கள் கல்லா கட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த தீபாவளிக்கு சரவெடியாக நிறைய படங்கள் வெளியானாலும் ரசிகர்களின் கவனம் இரண்டு படங்களில் இருந்தது. அந்த வகையில் கார்த்தி தனது 25ஆவது படமான ஜப்பான் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் தன்னை திறம்பட மாற்றிக் கொள்பவர் தான் கார்த்தி.
அந்த வகையில் ஜப்பான் படத்திலும் அவரது நடிப்பு சோடை போகவில்லை. ஆனாலும் திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் சொதப்பல் இருந்ததால் ரசிகர்களின் கவனம் பெறவில்லை. இதனால் நேற்று தீபாவளி பண்டிகையாக இருந்த போதும் ஜப்பான் வெறும் 4 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. மொத்தமாக மூன்று நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் 11 கோடி வசூலை ஜப்பான் பெற்றிருக்கிறது.
மேலும் ஜப்பானுக்கு போட்டியாக வெளியான கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு வரவேற்பு ஏக போகமாக கிடைத்து வருகிறது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா கூட்டணியில் இந்த படம் தான் இப்போது தீபாவளிக்கு தியேட்டரில் சரவெடியாக வெடித்து வருகிறது. முதல் நாளில் இப்படத்தின் கலெக்ஷன் சற்று மந்தமாக இருந்தாலும் அடுத்த அடுத்த நாட்களில் தட்டி தூக்கியது.
அந்த வகையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் கிட்டத்தட்ட 7 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரி குவித்திருந்தது. மேலும் உலகம் முழுவதும் ஜிகர்தண்டா படம் இதுவரை 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தால் எதிர்பார்த்ததை விட பெத்த லாபத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.