2 முறை வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட தனுஷ்.. ஒரே படத்தால் இயக்குனரின் சோலியை முடித்த ஜெயம் ரவி

தனுஷ் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே இவருடைய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இவரை வைத்து இரண்டு ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஒருவர் ஜெயம் ரவியால் தன் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது என கூறியுள்ளார்.

தலைநகரம், மருதமலை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சுராஜ். இவருடைய படங்களில் வடிவேலுவுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. மேலும் இவர் தனுஷை வைத்து படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இப்படங்கள் அனைத்தும் நகைச்சுவைக்காகவே வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து மூன்றாவதாகவும் இவர் தனுஷை வைத்து படம் இயக்க இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக தனுஷ் இயக்குனரை சில காலம் காத்திருக்க சொல்லி இருக்கிறார். ஆனால் அவரோ காத்திருக்க முடியாமல் ஜெயம் ரவியை வைத்து படம் எடுக்க கிளம்பிவிட்டார். அப்படி அவர் இயக்கிய படம் தான் சகலகலா வல்லவன்.

ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி போன்ற பெரிய பிரபலங்கள் இருந்தும் அந்த படம் படு தோல்வியை சந்தித்தது. இது குறித்து தற்போது பேசியுள்ள இயக்குனர் அந்த படம் தன்னுடைய வாழ்க்கையில் மோசமான அழிவை கொடுத்தது என்று தெரிவித்துள்ளார். அதற்கு தன்னுடைய கதை ஒரு விதத்தில் காரணம் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இருந்தாலும் முன்னணி நடிகர்கள் நடித்தும் கூட அந்த படத்தைப் பார்க்க கூட்டம் வரவில்லை. இது யாருடைய தவறு என்று புரியவில்லை. இதை யாரிடம் சொல்லி அழுவது, அன்றிலிருந்து என்னுடைய தோல்வி ஆரம்பம் ஆகிவிட்டது, அதை தொடர்ந்து என்னால் வெற்றி பெற முடியவில்லை என வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் தனுஷ் இரண்டு முறை வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டும் தன்னுடைய அவசரத்தால் அவர் மூன்றாவது வாய்ப்பை கெடுத்துக் கொண்டார். அதேபோன்று ஒரே படத்தால் ஜெயம் ரவி தன்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்து வைத்து விட்டார் என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.