சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் திரிஷ்யம் 2. தற்போது இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்குவதற்கு பல மொழிகளிலும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் திரிஷ்யம். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியானது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூப்பராக இருப்பதாக கருத்துக்கள் வந்ததைத் தொடர்ந்து பல மொழிகளிலும் இதற்கு முன்னர் திரிஷ்யம் பட ரீமேக்கில் நடித்த நடிகர்கள் திருஷ்யம் 2 ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதேபோல்தான் த்ரிஷ்யம் படத்தை தமிழில் கமலஹாசன் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்தார். தொடர் தோல்விகளால் துவண்டிருந்த கமலஹாசனுக்கு பாபநாசம் படம் மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது. மற்ற மொழிகளில் திரிஷ்யம் படத்தின் ஒரிஜினல் இயக்குனரான ஜீது ஜோசப் இயக்கவில்லை.
ஆனால் தமிழில் உருவான பாபநாசம் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கினார். இந்நிலையில் திரிஷ்யம் 2 படத்தை பாபநாசம் 2 படமாக எடுக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மோகன்லாலுக்கும் கமலஹாசன் நடிப்பில் என்ன வித்தியாசம் என கேள்வி கேட்டனர்.

அதற்கு ஜீத்து ஜோசப், மோகன்லால் பிறவி நடிகர் எனவும், இயற்கையாகவே ஒரு காட்சிக்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என புரிந்து நடித்துக் கொடுப்பார் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் கமல்ஹாசன் தேர்ந்த நடிகர், ஒரு காட்சியை எப்படி திறமையாக நடித்தால் அந்த காட்சி ரசிகர்கள் மனதில் பதியும் என்பதை கவனித்து நடித்துக் கொடுப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.