இயக்குனர் இமயம், சிகரம் என வானின் எல்லை வரை எவ்வளவு வர்ணித்தாலும் பாலச்சந்தரை புகழ்வதற்கு வார்த்தைகள் பத்தாது. அவ்வாறு அவருடைய ஒவ்வொரு படத்திலும் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமாக இருக்கும். வேறு எந்த படத்துடனும் அவர் படத்தை ஒப்பிட முடியாது.
இப்பேற்பட்ட கே. பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் எண்ணற்ற நடிகர், நடிகைகளை உருவாக்கியுள்ளார். இப்போது தமிழ் சினிமாவின் இரண்டு ஆளுமைகளாக இருக்கும் ரஜினி மற்றும் கமலை பாலச்சந்தர் தான் நிறைய படங்கள் கொடுத்து தூக்கி விட்டார். தற்போது வரை அதே நன்றியுடன் இவர்களும் உள்ளார்கள்.
இந்நிலையில் பாலச்சந்தரையே கதறவிட்ட ஒரு நடிகர் உள்ளார் என்றால் அது பலருக்கும் ஆச்சரியம் தான். அதாவது பாலச்சந்தரின் படங்களில் எப்போதுமே எமோஷனல் அதிகமாக இருக்கும். ஆரம்பத்தில் பாலச்சந்தர் பல நாடகங்களை இயக்கியுள்ளார்.
அந்தக் குழுவில் இருந்தவர் தான் துக்ளக் சோ. பத்திரிக்கையாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட இவர் வார்த்தையில் வித்தகர் என்றே சொல்லலாம். இவர் பெரும்பாலும் காமெடி கலந்த படங்களில் தான் நடித்துள்ளார். ஒரு சீரியஸான சீனில் கூட காமெடி வைக்க வேண்டும் என்பது சோவின் விருப்பமாக இருந்தது.
இந்நிலையில் பாலச்சந்தர் சில சீன்களை வேண்டாம் என்று எடுத்து விடுவாராம். ஆனால் மேடையில் நடிக்கும் போது சோ பாலச்சந்தர் ஒதுக்கிய சீன்களை வேண்டுமென்றே நடிப்பாராம். ஏனென்றால் மேடை நாடகத்தில் நடிக்கும் போது எதையும் தடுக்க முடியாது.
வெளியில் வந்தவுடன் பாலச்சந்தர் சோவை திட்டுவாராம். மேலும் உங்கள் குழுவுக்கு நடிப்பே சொல்லித் தர மாட்டேன் என கூறுவாராம். மற்றவர்கள் எல்லோரும் கெஞ்சுவதால் மறுநாளும் நடிப்பு சொல்லிக் கொடுக்க வந்து விடுவார். இவ்வாறமாபெரும் இயக்குனரான பாலச்சந்தரையே தான் கதறவிட்டதாக ஒரு மேடையில் சோ பேசியுள்ளார்.