கடந்த மாத இறுதியில் இருந்தே தமிழக தியேட்டர்களை கைவசம் வைத்திருக்கிறது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த படத்துடன் ரிலீஸ் ஆன தனுஷின் நானே வருவேன் திரைப்படத்திற்க்கே எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
ரிலீசிற்கு முன்பே எதிர்பார்ப்பை கூட்டிய இந்த படம் முதல் இரண்டு வாரங்களிலேயே வசூலை அள்ளியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பில் இருந்தே தமிழகம் எங்கு பொன்னியின் செல்வன் பேச்சு தான். பொன்னியின் செல்வனை கொண்டாடி வரும் இந்த நேரத்தில் அதற்கெல்லாம் முடிவு காட்டும் விதமாக ஒரு படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
சமீபத்தில் காந்தாரா என்னும் திரைப்படம் கன்னடத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய சென்சேஷனை உருவாக்கி இருக்கிறது. ரிஷப் ஷெட்டி என்பவர் இயக்கி நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் தமிழ் நடிகர் கிஷோர், நாயகி சப்தமி கவுடா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படம் ஏற்கனவே கன்னடத்தில் பொன்னியின் செல்வன் வசூலை காலி செய்து விட்டது.
பண்ணையாருக்கும் , பழங்குடி மக்களுக்குமான நில பிரச்னையை கையில் எடுத்திருக்கும் இந்த படம் நில அரசியல், நிர்வாகம் , பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, ஆதிக்க அடக்கு முறை என்ற கோணத்தை சரியாக மக்களிடையே கொண்டு சேர்த்தால் சென்சேஷன் படமாக்கிவிட்டது.
இந்த படத்தின் ரீச்சை உணர்ந்த இயக்குனர் ரிஷப் ஷெட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்து ரிலீஸ் செய்து இருக்கிறார். இந்த படம் இதுவரை 100 கோடி வசூல் செய்து விட்டதாக கூறுகின்றனர். இந்த படத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக பொன்னியின் செல்வன் அலை ஓய ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. மேலும் தமிழகத்தில் இந்த படத்திற்கு மெல்ல வரவேற்பும் கிடைத்து விட்டது. இந்த படம் பொன்னியின் செல்வன் வசூலை இப்போது காலி செய்து கொண்டிருக்கிறது. படம் பார்க்கும் ரசிகர்கள் பலரும் ஒரு படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என பொன்னியின் செல்வனை இயக்கிய மணிரத்தினம் இவர்களை பார்த்து கற்று கொள்ள வேண்டும் என விமர்சித்து வருகின்றனர்.