ஜெயிலர் 2வில் நெல்சனின் சம்பளம்.. பல கோடி அட்வான்ஸ் கொடுத்து லாக் செய்த சன் பிக்சர்ஸ் மாறன்

Nelson-Kalanithi Maran: சமீபத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டது. வசூலில் மிகப்பெரிய லாபத்தையும் அள்ளிக் கொடுத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக ஜெயிலர் படம் இடம்பெற்றிருக்கிறது.

இந்நிலையில் ஜெயிலர் 2 படம் உருவாக உள்ளது உறுதி ஆகிவிட்டது. ஆனால் இப்போது ரஜினி லால்சலாம் படத்தில் நடித்து முடித்த நிலையில் அடுத்ததாக லைக்கா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடனும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஆனால் லோகேஷ் படத்திற்கு முன்னதாகவே ஜெயிலர் 2 வர இருக்கிறதாம். இதற்காக நெல்சனுக்கு சம்பள தொகையையும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பேசி இருக்கிறாராம். அதாவது இப்போது அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தான் முதலிடத்தில் இருக்கிறார்.

இவரை அடுத்து அட்லி, லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்கள் இடம்பெறுகிறார்கள். இப்போது அவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் இடத்திற்கு நெல்சன் வந்து விட்டாராம். அதாவது ஜெயிலர் 2 படத்திற்கு கிட்டத்தட்ட 20 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் கலாநிதி மாறன் இந்த படத்திற்காக 5 கோடி அட்வான்ஸை இப்போதே நெல்சனுக்கு கொடுத்து விட்டாராம். ஏற்கனவே ஜெயிலர் படம் வெற்றி அடைந்தபோது நெல்சனுக்கு காசோலை மற்றும் கார் ஆகியவற்றை பரிசாக கலாநிதி மாறன் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நெல்சன் ஜெயிலர் 2 படத்திற்கு முன்னதாக ஒரு சில படத்தை எடுத்து விட்டு அதன் பிறகு இந்த படத்திற்கான வேலையில் இறங்க உள்ளார். மேலும் முதல் பாகத்தை விட பல மடங்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாகத்தான் இந்த படத்தை கொடுக்க வேண்டும் என்ற யோசனையில் ஜெயிலர் படக்குழு இருக்கிறதாம்.