அந்த ஆள விடுங்க நான் பண்ணி தரேன்.. கமல் கொடுத்த வாக்குறுதியால் கடுப்பான முதலாளி

கமல்ஹாசன் பாபநாசம் என்ற திரிஷ்யம் ரீமேக் படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது பாபநாசம் 2 படத்தை உருவாக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்களாம். மேலும் பாபநாசம் 2 படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பழங்கால நடிகை ஸ்ரீபிரியா வாங்கியுள்ளார்.

பாபநாசம் படத்தை மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இயக்கினார். ஆனால் அப்போது கமலுக்கும் ஜீத்து ஜோசப்புக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக சொன்னார்கள். பின்பு சேர்ந்து விட்டர்களாம்.

இதானால் கமலஹாசன் பாபநாசம் 2 கதையில் இனிமேல் தலையிட மாட்டேன் எனவும் கூறிவிட்டாராம். மேலும் இந்த படத்தை ஒரு மாதத்தில் முடித்து கொடுக்கிறேன் எனவும் கூறி உள்ளார் எனவும் தெரிகிறது. இயக்குனரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

இதனால் லைகா கடுப்பில் வேறு இருக்கிறதாம். ஒரு பக்கம் சங்கர் இன்னொரு பக்கம் கமல் இரண்டு பேரும் இந்தியன் 2 படத்தை தொங்கலில் விடுகிறார்களாம். கமலும் இந்த இந்தியன் பட பிரச்சனையெல்லாம் விடுங்க நான் முடிச்சி காட்றேன் என வாக்கும் கொடுத்திருக்கிறார் என சொல்கிறார்கள்.

papanasam-cinemapettai-01
papanasam-cinemapettai-01

தமிழில் இப்படி இழுபறி நடந்துகொண்டிருக்கும் நிலையில் மலையாளத்தில் த்ரிஷ்யம் 3 படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள் என்பதும் கூடுதல் தகவல்.