கமலுக்கும் 4, சுருதிஹாசனுக்கும் 4.. போட்டி போட்டு லிவிங் டு காதல் செய்யும் அப்பாவும், பொண்ணும்

சினிமாக்காரர்களில் பலர் திருமணம், குடும்பம் என்று அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சிலருக்கு திருமணம் என்றாலே வேப்பங்காயாய் கசக்கிறது. அதனாலேயே விவாகரத்தை தேடிச் செல்லும் பிரபலங்களும் உண்டு. இப்படி சில கதைகள் இருந்தாலும் எதுக்கு இந்த வம்பு என்று திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழும் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் உலக நாயகன் என்ற புகழுடன் இருக்கும் கமலுக்கும், திருமணத்திற்கும் ஏழாம் பொருத்தம் தான். அதனாலேயே அவர் இரண்டு திருமணம் செய்தும் அது விவாகரத்திலேயே முடிந்தது. முதலில் வாணி கணபதியை திருமணம் செய்த அவர் சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்தார். அதை தொடர்ந்து நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அது மட்டுமல்லாமல் வேறு சில நடிகைகளுடனும் இவர் கிசுகிசுக்கப்பட்டிருக்கிறார். இருந்தாலும் அந்த விமர்சனங்களை எல்லாம் இவர் கண்டு கொள்வதில்லை. என் வாழ்க்கை, நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் என்ற கொள்கையோடு தான் இவர் வாழ்ந்து வருகிறார். அதை தான் இப்போது அவருடைய மகள் ஸ்ருதிஹாசனும் பின்பற்றி வருகிறார்.

ஆனால் இதுவும் விவாகரத்தில் தான் முடிந்தது. அதைத்தொடர்ந்து அவர் நடிகை கௌதமியுடன் சில காலம் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். சில வருடங்களில் திடீரென நாங்கள் இருவரும் பிரேக் அப் செய்து விட்டோம் என்று கௌதமி அறிவித்தார். இப்படி கமலின் தனிப்பட்ட வாழ்வு எப்போதுமே சர்ச்சையாக தான் இருந்திருக்கிறது. அதை தொடர்ந்து நான்காவதாக அவர் நடிகை பூஜா குமார் உடனும் கிசுகிசுக்கப்பட்டார்.

அந்த வகையில் இவர் தன் காதலர்களை அடிக்கடி மாற்றி விடுவார் என்று அனைவருக்கும் தெரியும். தன்னுடைய காதல் பற்றி அவர் வெளிப்படையாக பேசியதும் உண்டு. ஆனால் சில நடிகர்களுடன் இவருக்கு நடிப்பையும் தாண்டி ஒரு ரிலேஷன்ஷிப் இருந்தது பலருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. அந்த வரிசையில் தனுஷ், சித்தார்த், விஷால் ஆகியோருடன் இவர் நெருக்கமாக பழகியதாக பல கிசுகிசுக்கள் வெளிவந்திருக்கிறது.

அதிலும் தனுஷின் விவாகரத்துக்கு இவரும் ஒரு முக்கிய காரணம் என்று வெளிப்படையாகவே பல செய்திகள் கிளம்பியது. ஆனால் இது பற்றி எல்லாம் சுருதி கவலைப்படுவது கிடையாது. தனக்கான காதலை அவர் தேடிக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் சாந்தனு என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இப்படி அப்பா பொண்ணு இருவரும் போட்டி போட்டு காதல் வாழ்க்கை வாழ்ந்து வருவது பல விமர்சனங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.