Kamal : மணிரத்தினம் இயக்கத்தில் கமல், சிம்பு காம்போவில் உருவாகி இருக்கிறது தக் லைஃப் படம். அபிராமி, நாசர், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.
மேலும் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆரம்பத்தில் சிறுவயதில் இருந்து சிம்புவை தனது அரவணைப்பில் கமல் வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் கமலுக்கே எதிரியாக சிம்பு மாறுகிறார்.
இனிமே நான் தான் இங்க எல்லாம், இனி ரங்கராஜ சக்திவேல் நான்தான் என்று சிம்பு பேசும் டயலாக்குகள் மாஸ். அதுவும் சிம்பு மற்றும் கமல் இருவரும் எதிரிகள் போல் மோதிக் கொள்ளும் காட்சிகள் மரண மாசாக இருக்கிறது.
கமல், சிம்பு மோதலில் தக் லைஃப் ட்ரைலர்
இது தியேட்டரில் கண்டிப்பாக பெரிய அளவில் கைதட்டளை பெறும். அதேபோல் மன்மதனாக இருக்கும் கமல் அபிராமி மற்றும் திரிஷா ஆகியோருடன் காதல் காட்சிகளிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார். மேலும் படத்தில் பல இடங்களில் மாஸ் டயலாக்குகள் இடம் பெறுகிறது.
ஒரு பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக தக் லைஃப் இருக்கப் போகிறது. மேலும் கமல், சிம்பு இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஒவ்வொரு காட்சி பார்க்கும் போதும் தெரிகிறது.
நாயகனைப் போல ஒரு மிகப்பெரிய ஹிட்டை மணிரத்தினம் கமல் காம்போ கொடுக்கும் என்பது இந்த ட்ரெய்லரை வைத்து பார்க்கும் போது தெரிகிறது. மேலும் படத்தை பார்க்கும் ஆர்வம் இப்போது ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.