தற்போது முன்னணி நடிகர்களில் பரபரப்பாக பேசப்படுபவர் கமல் மற்றும் விஜய். அத்துடன் இவர்கள் இருவரின் படமும் சமீபத்தில் வசூலில் வேட்டையாடி வருகிறது. அதனால் இவரை வைத்து படம் எடுப்பதற்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொக்கி போட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட இவர்களையே வெயிட்டிங் லிஸ்டில் வைத்திருக்கிறார் ஒரு இயக்குனர்.
இவர் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று பெரிய நடிகர்கள் எல்லோரும் வலை விரித்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவரோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எந்த நேரத்தில் யாரை வைத்து எடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்ற மமதையில் சுத்தி வருகிறார்.
அத்துடன் இப்பொழுது இரண்டு படங்களில் படு பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அதனால் இந்த படங்கள் முடியும் வரை கொஞ்சம் காத்திருங்கள் என்று இவரை தேடி வந்தவர்களை வெயிட்டிங் லிஸ்டில் வைத்திருக்கிறார். இவர் ஏற்கெனவே விஜய் மற்றும் கமலுக்கு கதை சொல்லி இருக்கிறார்.
அவர்களுக்கும் இவர் சொன்ன கதை பிடித்து போகவே உடனே இந்த படத்தை பண்ணிவிடலாம் என்று ஒத்துக் கொண்டுள்ளனர். அதற்கு இயக்குனர் இந்த ப்ராஜெக்ட் பண்ணலாம் ஆனால் இப்பொழுது இல்லை கொஞ்சம் டைம் வேண்டும் என்று காக்க வைத்திருக்கிறார். அந்த இயக்குனர் யார் என்றால் வெற்றி மாறன் தான்.
இவர் தற்போது விடுதலை 2 மற்றும் வாடிவாசல் படத்தில் பிஸியாக இருப்பதால் இவரை தேடி வரும் பெரிய நடிகர்களை அலட்சியம் செய்து வருகிறார். என்னதான் பிசியாக இருந்தாலும் விஜய் மற்றும் கமல் கால் சீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் மத்தியில் வெற்றிமாறன் இப்படி செய்வது எந்த விதத்தில் சரியாகும்.
அத்துடன் தனுஷ் அவரும் நீண்ட நாட்களாக வெற்றிமாறனுக்கு வலை விரித்து வருகிறார். ஆனால் வெற்றிமாறன் விஜய், கமலுக்கு என்ன பதில் சொன்னாரோ அதே பதில் தான் தாடிக்கார தம்பிக்கும் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் தனுஷ் செல்ல தம்பி மற்றும் வெற்றியான தம்பி என்பதால் வெற்றிமாறனின் அடுத்த ப்ராஜெக்ட் கண்டிப்பாக தனுஷ்க்கு தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது.