கமல், விஜய் தான் எங்களை காப்பாத்தினாங்க.. ரஜினி என்னத்த கிழிச்சாரு? எப்போதுமே உலக நாயகன் பெஸ்ட்!

Actor Kamal: பேருக்கு ஏற்றவாறு அவர் தான் எங்களுக்கு ஆண்டவர். அவருக்கு நிகராய் யாரும் ஈடு கொடுக்க முடியாது. எங்களின் வாழ்வாதாரத்திற்கு விடிவெள்ளியாய் இருந்தவரே அவர் தான் என உலகநாயகனை புகழ்ந்து தள்ளும் பிரபலம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

சமீபத்தில் வெளிவந்து வசூலில் சக்கை போடு போட்டு வரும் படம் தான் ஜெயிலர். பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாய் மக்களால் கொண்டாடப்பட்டு, திரும்பும் திசையெல்லாம் இதனை குறித்த பேச்சு தான் போய்க்கொண்டிருக்கிறது.

அவ்வாறு இருக்க, இவர் எல்லாம் ஒண்ணுமே கிடையாது இவர் சாதனை எல்லாம் ஏற்கனவே கமல், விஜய் முறியடித்து விட்டார்கள் என தனது பகிரங்கமான கருத்தை முன் வைத்து வருகிறார் அபிராமி ராமநாதன். இது இன்று கிடைத்த வெற்றி இது நிரந்தரமான ஒன்று கிடையாது.

ரஜினி மேற்கொள்ளும் ஒன்று இரண்டு வெற்றிகளையே கொண்டாடுகிறீர்கள் என்றால், கொரோனா சமயத்தில் வெளிவந்த விஜய் படம் மக்கள் அனைவரையும் திரையரங்கு வரவைத்து வசூல் ரீதியாக வெற்றி கண்டது. அதைத்தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்களையும் வாழ வைத்தது.

மேலும் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு திரையரங்குகளை மூடும் நிலைக்கு இருந்த பொழுது கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் தான் எங்களை காப்பாற்றியது. இல்லையென்றால் எப்போவோ திரையரங்கங்களை மூடி சென்று இருப்போம். இன்று ரஜினியை கொண்டாடினாலும் தொடர் தோல்வியை கொடுத்து நிலைகுலைய செய்தது அவரின் படங்கள் தான்.

அதை ஒரு பொழுதும் யாராலும் மறுக்க முடியாது. இப்பொழுது ஜெயிலர் படம் வெற்றி ஆனாலும் பல நேரங்களில் இவரை நம்பி பெரும் தொகையை போட்ட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை தான் சந்தித்திருக்கின்றனர். ஆகையால் எப்பொழுதுமே எங்களின் உலகநாயகன் தான் நிரந்தரமான ஆண்டவர்.