இப்படியெல்லாம் பிச்சை எடுக்கக் கூடாது.. கோபத்தில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கமல்

ரசிகர்களால் உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல்ஹாசன் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். சிவாஜிக்கு அடுத்தபடியாக கமல் தான் என்று சொல்லும் அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தும் இவர் அதற்காக நிறைய மெனக்கெடவும் செய்வார்.

உதாரணத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரத்திற்காக எவ்வளவு கஷ்டம் என்றாலும் அவர் அதை தயங்காமல் செய்வார். மேலும் பல படங்களில் உடலை வருத்தி இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் ஒரு சிறந்த திரைப்படத்தை கொடுப்பதற்காக இவர் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று நடிப்பார்.

ஆனால் சமீபகாலமாக திரையுலகில் இருக்கும் நடிகர்கள் சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிதுபடுத்தி சோசியல் மீடியாவில் தெரிவிக்கின்றனர். அதாவது படப்பிடிப்பில் சிறு காயம் ஏற்பட்டால் கூட அதை உடனே வீடியோ எடுத்து நான் கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்தேன் என்றும் மிகுந்த வலியை அனுபவித்ததாகவும் ரசிகர்கள் முன்பு கூறி வருகின்றனர்.

இதைப் பற்றி கமலிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் சினிமாவை பொருத்தவரை நோ பெயின் நோ கெயின் என்ற கொள்கை இருக்கிறது. அதாவது ஒரு படத்தில் நடிக்கிறோம் என்றால் கஷ்டப்படாமல் இருக்க முடியாது.

கஷ்டப்பட்டால் தான் படம் நன்றாக வரும். அதை பார்க்கும் ரசிகர்களுக்கு நம்முடைய கஷ்டத்தை நாம் கூறக்கூடாது. எனக்கு கால் உடைந்து விட்டது, இடுப்பு உடைந்தது என்றெல்லாம் கூறினால் அவற்றை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மேலும் கால் உடைந்த போதிலும் அவர் எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்று தான் ரசிகர்கள் கூற வேண்டும். அதைத்தான் அவர்களும் விரும்புவார்கள். கோவிலின் வெளியில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரர்களைப் போல கால் உடைந்தது என்று கூறி காசு வாங்க கூடாது. நம்முடைய திறமையை காட்டி தான் காசு வாங்க வேண்டும் என்று அவர் பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் அவர் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு தகுந்த அறிவுரையை வழங்கி இருக்கிறார். விக்ரம் திரைப்படத்தில் நடிக்கும் போது கூட கமல்ஹாசன் கடுமையான கால் வலியில் அவதிப்பட்ட போதும் சிறப்பாக நடனம் ஆடினார் என்று இயக்குனர் லோகேஷ் தெரிவித்து இருந்தார். இதுவே கமலுக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது.