Kamal Vs Rajini, Vijay Vs Ajith: சினிமா வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்தபடியாக ரஜினி, கமல், அஜித், விஜய் என்ற இரு பெரும் நடிகர்களுக்குள்ளான போட்டி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள ஒரு விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கமல் ஒருபோதும் ரஜினி ஆக முடியாது. அதே போன்று விஜய் ஒருபோதும் அஜித்தாக முடியாது என்ற ஒரு கருத்து இப்போது மீடியாவில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதற்கான காரணத்தையும் ரசிகர்கள் பட்டியல் போட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜெயலலிதா பங்கு பெற்ற ஒரு நிகழ்வில் ரஜினியும் கலந்து கொண்டார்.
அப்போது அவருக்கு எதிரான கருத்துக்களை அவர் வெளிப்படையாக தெரிவித்தது மட்டுமல்லாமல் விரலை சொடுக்கு போட்டு பேசியது அன்றைய நாளிதழ்களில் பரபரப்பு செய்தியாக வெளிவந்தது. சிங்க பெண்ணான ஜெயலலிதாவை எதிர்த்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் என்று கூட பேசப்பட்டது.
அதைத்தொடர்ந்து அஜித் ஒரு மேடையில் கருணாநிதியிடம் நடிகர்களை இது போன்ற விழாக்களுக்கு வர சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று போட்டு உடைத்தார். அப்போது ரஜினி கமல் உட்பட பல நடிகர்களும் அங்கு தான் இருந்தனர்.
அதில் சூப்பர் ஸ்டார் மட்டும் தான் எழுந்து நின்று கைத்தட்டி தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்தார். தற்போது இதை பற்றி நினைவு கூறும் ரசிகர்கள் கமல் விஸ்வரூபம் பட பிரச்சனையை சமாளிக்க முடியாமல் நாட்டை விட்டு போகிறேன் என்று கூறினார். அதேபோல் விஜய்க்கும் தலைவா உள்ளிட்ட பல படங்களின் ரிலீஸ் சமயத்தில் பிரச்சனை ஏற்பட்டது.
அப்போதெல்லாம் அவர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு தான் பிரச்சனை முடிந்தது. இப்படி இருக்கும் இந்த நடிகர்கள் இப்போது அரசியல் ஆசையில் இருக்கின்றனர். ஆனால் அரசியல் மேடையையே தெறிக்க விட்ட ரஜினி, அஜித் அதை விட்டு விலகி இருக்கின்றனர் என ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.