70, 80-களில் எதிரும் புதிரும் ஆக இருந்த உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்றும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் அப்படியே தான் இருக்கு’ என்பதற்கு ஏற்றார் போல இப்போ வரை ஹீரோக்கள் ரோலில் மட்டுமே நடித்து வருகிறார்.
ஆனால் உலக நாயகன் கமலஹாசன் எந்தக் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தக்கூடியவர். தற்போது இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன விக்ரம் படத்திலும் கூட வயதான தோற்றத்தில் தோன்றி மிரட்டி விட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் கமல் செய்த சம்பவத்தை குறித்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
கமலஹாசன் பர்மா பஜாரில் திருட்டு சிடி தயாரிப்போரை தட்டி கேட்டுள்ளார். இதன் மூலம் பெரிய கைகளைப்பு நிகழ்ந்து விடவே ராஜனை அங்கு அனுப்பிவிட்டு கமலஹாசன் திரும்பி சென்றுள்ளார். இதில் பர்மா பஜாரில் கலவரம் நிகழ்ந்த இடத்திற்கு போலீஸ் வந்தவுடன் ராஜனை ஒரு கொலை குற்றவாளி போல் கலவரத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்வதற்கு தேடியுள்ளனர்.
ராஜனை கே. ஆரும், கேஆர்ஜி-யும் போலீசின் கைது நடவடிக்கையில் இருந்து ஆதரித்துள்ளனர். பின்னர் கமலஹாசன் சொல்லி தான் இவ்வாறு செய்ததாக ராஜன் கூற அவரிடம் கேட்டுள்ளனர். நீங்கள் சொல்லி தானே ராஜன் அங்கு சென்றார்கள் போலீசாரிடம் நடந்த நிலைமையை அதற்கான விளக்கத்தை கொடுங்கள் என்று கேட்டதற்கு ராஜனை எனக்கு தெரியாது அவரை நான் அனுப்பவில்லை என்று கூறிவிட்டார்.
அன்று இரவு ராஜனுக்கு ஒரு அலைபேசி தகவல் வந்தது அதில் ரஜினிகாந்தின் செக்ரட்டரி ஆறுமுகம் கேஆர் ராஜனிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்களிடம் பேச விரும்புவதாக தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து ராஜனிடம் ரஜினிகாந்த் திரைத்துறைக்காக போராடினதற்காக பாராட்டுகளை தெரிவித்தார். என்னை அனுப்பிய கமல்ஹாசன் என்னை யார் என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்.
ஆனால் ரஜினிகாந்த் தைரியமாக திரைத்துறைக்கு நல்லது செய்து இருக்கிறீர்கள் நான் உங்களுடன் கூட இருக்கிறேன் என்று ஆறுதலாக கூறினார். இதில் ரஜினி கூட இருக்காரோ இல்லையோ ஆனால் அதை அந்த வார்த்தைக்காகவே ரஜினியின் மீது கேஆர் ராஜன் அவர்கள் தனி மரியாதை உள்ளது. அதனால்தான் இன்றளவும் ரஜினியை போற்றிக் கொண்டுள்ளார்.
அதனால்தான் இன்றைய தலைமுறையை ஹீரோக்களை ஒரு எம்ஜிஆர் போலவும் ரஜினி போன்றும் வரவேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறார். கமலஹாசன் பெரும்பாலும் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் ரஜினிக்கு நிறைய தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதிலும் தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் ரஜினி அவர்களுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறார்.