தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்த படங்களை பற்றிய அறிவிப்புகள் வந்தாலும் கமலஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணிக்கு தனி ஒரு எதிர்பார்ப்பு இருப்பது மறுக்க முடியாத ஒன்று.
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் என்ற படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட மிரட்டலாக இருந்தது.
ஆரம்பத்திலிருந்தே இந்த படம் ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அதை அதிகரிக்கும் வகையில் விஜய் சேதுபதி, பகத் பாசில் என படத்தில் இணைந்த பிரபலங்களும் வேற லெவலில் உள்ளனர்.
இதனால் ஒவ்வொருவருக்கும் எந்த மாதிரியான கதாபாத்திரம் இருக்கும் என யோசித்த ரசிகர்களுக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது. விக்ரம் படத்தில் கமலஹாசன் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிக்க உள்ளாராம்.
அதேபோல் பகத் பாசிலுக்கு விஞ்ஞானி கதாபாத்திரம் என்கிறார்கள். மேலும் மாஸ்டர் படத்தில் வந்ததைப்போல முழுநேர வில்லனாக களம் இறங்கியுள்ளாராம் விஜய் சேதுபதி. அப்படியே இதை யோசித்துப் பார்த்தால் கமல் பத்து கெட்டப்பில் நடித்த தசாவதாரம் படம் ஞாபகத்திற்கு வரலாம்.
அதிலும் விஞ்ஞானி, வில்லன், போலீஸ் என எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டார். இப்போது அதையே தனித் தனியாக பிரித்து விஜய் சேதுபதிக்கு ஒன்று, பகத் பாசில் ஒன்று என லோகேஷ் கனகராஜ் சதுரங்கம் ஆடி வருகிறார் என்கிறார்கள் விக்ரம் வட்டாரங்கள்.
இப்படி ஒரு வதந்தி கோலிவுட்டில் சுற்றிக் கொண்டிருக்க, வதந்தி உண்மையாகி விடக் கூடாது என்பதே ஆண்டவர் ரசிகர்களின் வேண்டுதலாக உள்ளது. விக்ரம் திரைப்படம் 2022 பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.
