யூகிசேது பொட்டில் நறுக்குன்னு அடித்த கமல்.. வில்லங்கம் புடிச்ச ரங்கராயரிடம் செமத்தியா வாங்கிய வேதம்

விண்வெளி நாயகன், இது கமலுக்கு கொடுக்கப்பட்ட புது பெயர். ஏற்கனவே கமல் என்னை உலகநாயகன் என அழைக்க வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக் கொண்டார். இதனால் அவருக்கு இந்த புது பெயர் மணிரத்தினத்தின் தக்லைப் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டது.

இந்த படம் ஜூன் 5ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. பட பிரமோஷன் வேலைகளில் கமல் பிஸியாக இருக்கிறார். அவருடன் சிம்பு மற்றும் த்ரிஷா இணைந்து பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் யூகிசேது உடன் நேர்காணலில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார் கமல்.

கமலுடன் பஞ்சதந்திரம் படத்தில் நண்பராக வேதம் கதாபாத்திரத்தில் நடித்தவர் யூகிசேது. இருவருக்கும் இடையே பல வருட கால நட்பு உண்டு. உலக நாயகன் பட்டம் ஏன் வேண்டாம் என்பது பற்றியும், புது பட்டம் வழங்கப்பட்டதை பற்றியும் பல விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு கட்டத்தில் யூகிசேது கமலிடம் இனிமேல் சினிமாவில் நீங்கள் சாதிப்பதற்கு என்ன இருக்கிறது. எல்லாவற்றையும் சாதித்து விட்டீர்கள் என கூறுகிறார். அதற்கு முழுவதுமாக மறுப்பு தெரிவித்த கமல் நான் இன்னும் சினிமாவில் குழந்தை தான் என அவருக்கு பதிலடி கொடுத்தார். இன்னும் அதில் கரை காண நிறைய இருக்கிறது,கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

நல்ல விருந்து சாப்பிட்ட பின்னும் எனக்கு பசிக்கும் ஐயா. ஏன் பசிக்கிறது தெரியுமா என அவருக்கு நச்சுனு பதில் ஒன்றை கூறி அசத்தினார் விண்வெளி நாயகன் கமல். அது மட்டும் இல்லாமல் நாயகன் மற்றும் ரங்கராய சக்திவேல் நாயக்கர் இருவருக்கும் உண்டான வேறுபாட்டினை தக்லைப் படத்தில் போய் பார்க்குமாறு கூறினார்