தமிழ் படங்களில் வில்லன்கள் தட்டுப்பாடு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. தெலுங்கு, மலையாளம் போன்ற பல படங்களில் இருந்து இப்பொழுது வில்லனிசம் செய்வதற்கு நடிகர்களை அழைத்து வருகிறார்கள். அப்படி சமீபத்தில் விநாயகன், உபேந்திரா, ஹரிஷ் பெரிடி போன்ற வில்லன் நடிகர்கள் தமிழுக்கு கிடைத்திருந்தனர்.
இப்பொழுது புதிதாய் ஒரு வில்லன் நடிகர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ளார். சூர்யா மற்றும் கமலுடன் தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் . தக்லைப் படத்தில் கமல் ஒரு பக்கம் பட்டையை கிளப்பினால் மறுபக்கம் இவர் மிரட்டுகிறாராம். இதனால் அடுத்தடுத்த படங்கள் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
பனி படத்தின் புகழ் ஜோ ஜூ ஜார்ஜ். இவர் ஏற்கனவே மூன்று, நான்கு தமிழ் படங்களில் தலை காட்டினாலும் இப்பொழுது இவருக்கு தமிழ் இண்டஸ்ட்ரியில் வில்லன் நடிகராக மாறுவதற்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகள் இவரிடம் இருக்கிறது.
இங்கே எப்படி விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பட்டையை கிளப்புகிறாரோ அதை போல் மலையாளம், தெலுங்கு மொழிகளில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பில் மிரட்டி விடுவாராம். இவர் வில்லனாக நடித்த ஆதி கேசவன் என்ற தெலுங்கு படத்தில் அனைவரையும் கவர்ந்திருந்தார்.
தமிழில் ரெட்ரோ படத்தில் சூர்யாவுடனும், கமலின் தக்லைப் படத்திலும்நடித்த வருகிறார் இதில் கமல் படத்தில் வில்லனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக்லைப் படம் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீசாக உள்ளது. ஜோ ஜூ ஜார்ஜ் பாடி லாங்குவேஜ், மற்றும் மிரட்டும் பார்வை இது இரண்டும் இவருக்கு முரட்டு வில்லன் அவதாரத்தை கொடுப்பதாக கமல் கூறி வருகிறாராம்.