லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, அடுத்தப்படியாக கமல்ஹாசன் வைத்த விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் கமல்ஹாசனின் நடிப்பு பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.
கமல்ஹாசனின் படங்களைப் பார்த்துதான் தனக்கு இயக்குனராக வேண்டும் ஆசை வந்ததாகவும் இதுவரைக்கும் எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் படம் இயக்குவதற்கு முழுக்க முழுக்க கமல்ஹாசனின் படங்கள் தான் காரணம் என கூறியுள்ளார்.
அந்த அளவிற்கு லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். இதனை பல மேடைகளில் கூறியுள்ளார். மேலும் விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் கமல்ஹாசன் கையில் கத்தி வைத்தபடி மிக ஆக்ரோசமாக இருப்பதாக வெளியிட்டுள்ளனர்.
இதனை வைத்துப் பார்க்கும் போது முழுக்க முழுக்க கமல்ஹாசன் தனது ஹீரோதனத்தையும் வில்லத்தனத்தையும் வைத்துதான் படம் உருவாகியுள்ளது. தற்போது விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதியை நாளை காலை 7 மணி அளவில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் விக்ரம் படத்திற்கு பிறகு பீஸ்ட் மற்றும் ஆர்ஆர்ஆர் படம் வெளியாவதால் விக்ரம் படத்தை முன்பே வெளியிட்டால்தான் வசூலை அள்ள முடியும் என்ற திட்டத்தில் தான் படக்குழுவினர் திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர்.