உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனிடையே உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்திற்கு பின் அரசியலில் முழுமையாக ஈடுபடுவார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அது எல்லாம் தலைகீழாக மாறி பிரபல இயக்குனர்கள் கமலஹாசனை அடுத்தடுத்த தங்களது திரைப்படங்களில் நடிக்க வைக்க கமிட் செய்து உள்ளனர்.
உலகநாயகன் கமலஹாசன் நீண்ட வருடங்களுக்குப் பின் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனிடையே இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் இயக்குனர் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெட்ராஸ், காலா, கபாலி சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா. ரஞ்சித் தற்போது கமலஹாசனின் நடிப்பில் முதன் முதலாக ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார். பொதுவாக பா ரஞ்சித்தின் திரைப்படங்களில் அரசியல் சாயம் சற்று அதிகமாக பூசப்பட்டிருக்கும் அதே போல உலகநாயகன் கமலஹாசனின் திரைப்படங்களிலும் அரசியல் வசனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருக்கும்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்த கலவையாக ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்தை உருவாக்குவார்கள் என்று திரை வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரைத் தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் கமலஹாசனின் நடிப்பில் இன்னொரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
தனது சிறு வயதிலிருந்தே உலக நாயகன் கமலஹாசனின் மிகப்பெரிய ரசிகனான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இவரது படங்களில் உலகநாயகனின் ஸ்டைலை பின்பற்றி வருகிறார். மேலும் கமலஹாசனும், லோகேஷ் கனகராஜ் மீது அதிக அன்பு கொண்டுள்ள நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல்ஹாசன் மீண்டும் நடிப்பார் என்று உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே நடிகர் கமல் தற்போது தனது கட்சியுடன் சேர்ந்து அரசியல் பணியில் ஈடுபடுவதை காட்டிலும் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருவதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். கூடிய விரைவில் கமலஹாசனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மேலும் புத்துணர்ச்சி ஊட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.