80-களில் கமலஹாசன் செய்த சாதனை.. இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகப்படுத்தியது கமல் தான். அதுமட்டுமின்றி சினிமாவுக்காக பல அர்ப்பணிப்புகளை கமல் செய்துள்ளார்.

அந்த வகையில் கமல் நிகழ்த்திய ஒரு சாதனையை தற்போது எந்த நடிகராலும் முறியடிக்க முடியவில்லை. அதாவது ரஜினியை போல நிறைய பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் கமல்ஹாசன் கொடுத்ததில்லை. கடைசியாக கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தான் அவரது திரை வாழ்க்கையிலேயே அதிக வசூல் செய்த படமாக உள்ளது.

அதாவது கமல்ஹாசன் 80லேயே ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். 1989இல் கமல்ஹாசன் 4 மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமலஹாசன் சேதுபதி, ராஜா, அப்பு என்று மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் அபூர்வ சகோதரர்கள்.

இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து ஹிந்தியிலும் அப்பு ராஜா என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இதே ஆண்டு மலையாளத்தில் டிகே ராஜூகுமார் இயக்கத்தில் சாணக்கியன் என்ற படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இப்படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தெலுங்கு சினிமாவில் 1989 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் இந்திருடு சந்துருடு என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தமிழில் பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான வெற்றி விழா என்ற படமும் நல்ல வசூல் பெற்றது.

இவ்வாறு ஒரே ஆண்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் நான்கு மொழிகளிலும் ஹிட் கொடுத்த கமல்ஹாசன் சாதனை படைத்துள்ளார். இதனால் தான் உலகநாயகன் என்று ரசிகர்களால் கமல்ஹாசன் போற்றப்படுகிறார். மேலும் தென்னிந்திய மொழிகளில் தூக்கலாகக் கொண்டாடப்பட்ட ஒரே பன்முக கலைஞன் இவர்தான்.