விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கமல் தற்போது முழு வீச்சில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அதன் முதல் கட்டமாக அவர் பல வருடங்களுக்கு முன்பே கமிட் செய்து வைத்திருந்த இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் ஆரம்பமாகி படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சென்னை, திருப்பதி என்று மாறி மாறி நடந்து வரும் அந்த ஷூட்டிங்கில் தற்போது கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அதில் தான் தற்போது சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதாம். அதாவது சமூகத்தில் நடக்கும் அரசியல் மற்றும் ஊழலுக்கு எதிராக ஒருவர் நியாயம் கேட்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை கரு.
அதனால் படத்தில் இன்றைய அரசியலை சாடியும், ஊழலுக்கு எதிராகவும் பல காரசாரமான வசனங்களும் இருக்கிறதாம். இதை பார்த்த உதயநிதி பதறிப் போய் தற்போது அதை மாற்ற சொல்லி கேட்டிருக்கிறார். இந்தியன் 2 திரைப்படம் பல வருடங்களாக பிரச்சனையில் கிடந்து உதயநிதியின் உதவியால் தான் மீண்டும் தொடங்கப்பட்டது பலரும் அறிந்த செய்தி.
தற்போது அவரும் தயாரிப்பு நிர்வாகத்தில் இணைந்துள்ள படியால் படத்தில் இப்படிப்பட்ட வசனங்கள் இருப்பதை அவர் மிகவும் சங்கடமாக கருதினாராம். சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் இப்போது உதயநிதி கலக்கி கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது வசனங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு வருகிறதாம். முன்பு இடம்பெற்று இருந்த கடுமையான வார்த்தைகளை தவிர்த்து விட்டு இப்போது வேறு சில சமூக கருத்துக்கள் கொண்ட வசனங்களும் சேர்க்கப்பட்டு வருகிறதாம்.
இதற்காக ஒரு குழுவே தற்போது இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசியலில் பொது மக்களுக்காக குரல் கொடுத்து வரும் கமல் இதை எப்படி அனுமதித்தார் என்பதுதான் தற்போது திரையுலகில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.