பான் இந்தியா படம்னா இப்படி இருக்கணும்.. இதுக்கும் கமல் தான் முன்னோடி, மிரட்டிவிட்ட விண்வெளி நாயகன்

Kamal: தமிழ் சினிமாவுக்கு புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய பெருமை கமலுக்கு உண்டு. அதேபோல் பான் இந்தியா படத்திற்கும் அவர்தான் முன்னோடியாக இருந்திருக்கிறார்.

இதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட 37 வருடங்களுக்கு முன்பே இதை உலகநாயகன் செய்து காட்டியதோடு வசூல் லாபமும் பார்த்திருக்கிறார்.

அதாவது 1987 ஆம் ஆண்டு சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல், அமலா நடித்திருந்த கன்னட படம் தான் புஷ்பக விமானா. வசனமே இல்லாமல் டார்க் காமெடி பாணியில் இப்படம் வெளிவந்தது.

கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழில் பேசும் படம் என்ற பெயரிலும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியானது.

பான் இந்தியா படம்னா இப்படி இருக்கணும்

அதேபோல் கன்னடம் மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலிருந்தும் திறமையான நடிகர்களை நடிக்க வைத்திருந்தனர். ஏனென்றால் படத்தில் வசனம் கிடையாது.

அவர்களின் முகபாவனையை வைத்து தான் பார்வையாளர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இது சவாலாக இருந்த நிலையில் விநியோகஸ்தர்கள் கூட படம் ஓடுமா என்ற சந்தேகத்தில் இருந்திருக்கின்றனர்.

ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டி கன்னடத்தில் படம் 35 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. அதேபோல் மற்ற மொழிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்தது.

இப்படி 35 லட்சத்தில் உருவான படம் ஒரு கோடி வரை வசூலித்தது. அதேபோல் தேசிய விருது பிலிம் பேர் உள்ளிட்ட பல விருதுகளையும் தட்டி தூக்கியது..

இதை வைத்து பார்க்கும் போது முதல் பான் இந்தியா படத்தின் நாயகன் என்ற பெருமையும் கமலுக்கு இருக்கிறது.

Leave a Comment