கமலால் ஒரே படத்தால் காணாமல் போன தயாரிப்பாளர்.. மீண்டும் கை பிடித்து தூக்கி விடும் சூப்பர் ஸ்டார் மோகன்லால்

அதிகமான படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்து வெற்றியை பார்த்து அதன் மூலம் லாபத்தை சம்பாதித்தவர் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இவர் தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான தயாரிப்பாளர் என்ற பட்டியலில் இடம் பெற்றவர். இவர் தயாரிக்கும் படங்கள் பொதுவாகவே லாபத்தை மட்டும் தான் கொடுத்து வந்திருக்கிறது.

அப்படிப்பட்ட அவர் கடைசியாக கமல் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தார். ஆனால் அந்த படம் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியும் பெறவில்லை, லாபத்தையும் கொடுக்கவில்லை. அதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதில் இருந்து மீள முடியாமல் கொஞ்சம் வருடங்களாகவே எந்த படங்களையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கிறார்.

அத்துடன் அந்தப் படத்தின் நஷ்டத்தால் அதிக அளவில் கடன் ஏற்பட்டிருக்கிறது. அதை அடைப்பதற்காகவே இத்தனை வருடங்களாக கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். இப்பொழுது தான் ஒரு வழியாக அனைத்து கடன்களையும் அடைத்து முடித்திருக்கிறார். அதனால் இப்பொழுது மறுபடியும் படத்தை தயாரிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்.

வருகிற 2024 ஆம் ஆண்டு முதல், படத்தை தயாரிக்க இருக்கிறார். இது சம்பந்தமாக விஜய் சேதுபதி இடம் பேசி ஒரு அட்வான்ஸ் தொகையை கொடுத்து விட்டாராம். அதேபோல் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஒரு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இயக்குனர் யார், எப்படிப்பட்ட கதை என்று கூட தெரியாமல் ஹீரோக்களை முன்னதாகவே புக் பண்ணி விட்டார்.

ஆனால் இவர் ஒரு நேரத்தில் வெற்றி படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே விஜய்யை வைத்து படம் தயாரிக்க பெரிய அட்வான்ஸ் தொகையை விஜய்யிடம் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் காலங்களில் கூட அதைப்பற்றி பேசாமல் இன்றுவரை இருந்திருக்கிறார். அதற்கு காரணம் இதனுடைய தந்திரமான பிளான் தான்.

அது என்னவென்றால் விஜய் வளர்ந்து வந்த ஒரு முன்னணி ஹீரோ. பிறகு இவர் தயாரிக்க ஆரம்பிக்கும் பொழுது இந்த அட்வான்ஸ் தொகையை அடுத்த படத்திற்கு அவரை நடிக்க வைத்து பெரிய லாபத்தை பார்த்திடலாம் என்ற ஒரு நம்பிக்கைதான். அதனால் இவர் படம் தயாரிக்க தொடங்கியதும் இதைப்பற்றி விஜய்யிடம் பேசி நடிக்க வைப்பார். அப்படி இல்லை என்றால் இது சம்பந்தமாக ஒரு பஞ்சாயத்தை கூட்டுவார் என தெரிகிறது.