டாப் ஹீரோக்கள் விரும்பும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் லோகேஷ். இப்போது விஜய்யின் லியோ படத்தை எடுத்து வருகிறார். திரிஷா, சஞ்சய்தத், மன்சூர் அலிகான், அர்ஜுன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற உள்ளது.
இந்நிலையில் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் அவருடைய படங்களின் அப்டேட் வெளியாக இருக்கிறது. அதன்படி சமீபத்தில் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த சூழலில் தளபதி 68 படத்திற்கான டைட்டில் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாக இருக்கிறது. மேலும் சிஎஸ்கே சம்பந்தமான டைட்டிலாக தான் இருக்கும் என ரசிகர்கள் கனித்துள்ளனர். மேலும் இதே நாளில் லியோ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாக இருக்கிறது. ஏற்கனவே படத்தின் டைட்டில் வீடியோவை லோகேஷ் தெறிக்க விட்டிருந்தார்.
அதுமட்டுமின்றி லியோ படபிடிப்பு எடுக்கும் போது தொழிலாளர்கள் கடும் குளிரில் எவ்வாறு வேலை பார்த்தார்கள் என்பதையும் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர். இப்போது லியோ கிளிம்ஸ் வீடியோ வேற லெவலில் உருவாகி இருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் ஆண்டவரும் லியோ படத்தில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே லோகேஷ் உடன் இணைந்து விக்ரம் படத்தில் கமல் பணியாற்றி இருந்தார். இந்த படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டினால் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் நச்சரித்து வருகிறார்கள். இப்போது லியோ கிளிம்ஸ் வீடியோவில் பின்னணி குரல் கமல் கொடுத்துள்ளார்.
லோகேஷின் வேண்டுகோளுக்கு இணங்க கமலும் குரல் கொடுத்துள்ளார். ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னணி குரல் கமல் கொடுத்திருந்தார். தளபதி விஜய்க்காக கமல் இவ்வாறு செய்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.