நேரம் சரியில்லாத 3 பேரை தூக்கிவிடும் கமல்.. விக்னேஷ் சிவனுக்காக உலகநாயகன் எடுக்கும் ரிஸ்க்

விக்ரம் படத்திற்கு பிறகு தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு உலக நாயகன் கமலஹாசன் அடுத்த கட்ட வேலையில் இறங்கி உள்ளார். இவர் இனிமேல் படங்களில் நடிப்பதை காட்டிலும் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தப் போகிறார்.

கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு மூன்று படம் தயாரிக்க இருக்கிறார். அதில் ஒரு படமாக இயக்குனர் விக்னேஷ் சிவனுக்காக பெரிய ரிஸ்க் எடுக்கப் போகிறார். ஏனென்றால் ஏகே 62 படத்தை இயக்குவது விக்னேஷ் சிவன் தான் என ஆசை காட்டி மோசம் செய்த அஜித்தால் துவண்டு போய் மூலையில் உட்கார்ந்து இருந்தார்.

இவருக்கு பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறினர். ஆனால் கமல் ஆறுதல் கூறுவதை விட  கை கொடுத்து தூக்கி விட வேண்டும் என, தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்குவதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன் உட்பட நேரம் சரியில்லாமல் இருக்கும் 3 பிரபலங்களின் படங்களை தயாரிக்க உலகநாயகன் கமலஹாசன் முன்வந்துள்ளார். சிவகார்த்திகேயன் உடன் தான் முதல் படம். தேசிங்கு  பெரியசாமிக்கு இரண்டாவது ப்ராஜெக்ட். விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் மூன்றாவது ப்ராஜெக்ட் என வரிசையாக மூன்று படங்களை தயாரிக்க உள்ளார் உலக நாயகன்.

டாக்டர், டான் போன்ற இரண்டு படங்களின் மூலம் 100 கோடியை பாக்ஸ் ஆபிஸில் குவித்த சிவகார்த்திகேயனுக்கு கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் கொடுத்த பெரிய அடியினால் துவண்டு போய் இருக்கிறார். அதிலிருந்து மீண்டு வருவதற்காக சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் கமல் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்

மேலும் இயக்குனர்களான தேசிங்கு பெரியசாமி மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் சிறிது காலமாக நேரம் சரியில்லை. அதனால் கமல் இப்பொழுது இந்த மூன்று பேரின் படத்தையும் பெரிய பட்ஜெட்டில் தயார் செய்து அவர்களை காப்பாற்றும் விதமாக செயல்பட்டு வருகிறதாம்.