கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தின் மீது தான் தற்போது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. எலக்சன் முடித்த கையோடு கமல் லோகேஷுடன் தனி விமானத்தில் விக்ரம் படத்திற்காக கிளம்பிவிட்டார்.
மேலும் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக முதலில் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் கால்ஷீட் பிரச்சனையால் அந்த படத்திலிருந்து ஒதுங்கினார். அதன் பிறகு தற்போது கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் என்ன என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகி இணையத்தை வேட்டையாடி வருகிறது.
15 வருடத்திற்கு பிறகு மீண்டும் கமலஹாசன் போலீஸ் யூனிஃபார்ம் போட்டு நடிக்க உள்ளாராம். கடைசியாக கமல் காக்கி சட்டை அணிந்து நடித்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு படம் தான்.
அதன் பிறகு சில படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் யூனிபார்ம் போட்ட போலீஸ் அதிகாரியாக வரவில்லை. சீக்ரெட் ஏஜெண்ட் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த கமல்ஹாசனை மீண்டும் யூனிஃபார்ம் போட வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
வேட்டையாடு விளையாடு படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த மேஜிக் மீண்டும் நடக்குமா என்பதே கமல் ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது. காரணம் கமல் ஒரு பெரிய வெற்றிப்படம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதல்லவா.
