விக்ரம் படத்தில் கமலின் புதிய அவதாரம்.. லோகேஷ் மறைத்து வைத்திருக்கும் மற்றொரு ரகசியம்

உலக நாயகன் கமலஹாசனின் திரை வாழ்க்கையிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது விக்ரம் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் வசூல் நல்ல லாபத்தை ஈட்டி வருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே கமல் இளமை தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் என்ற செய்திகள் வெளியானது.

அதாவது 1980இல் உள்ளதுபோல De-Aging technology மூலம் தற்போது கமலை இளமையாக விக்ரம் படத்தில் காட்டியுள்ளனர் என்ற செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால் படத்தில் அதுபோன்ற காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. இது குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் தனது நெருங்கிய நண்பர் மற்றும் அவரது குழுவினரிடம் இந்த வேலையை ஒப்படைத்துள்ளார். இதற்கு கிட்டதட்ட 6 முதல் 8 மாதங்கள் தேவைப்படுமாம். அதனால் அதற்கான பணிகள் முடிய தாமதமான அந்தக் காட்சிகள் விக்ரம் படத்தில் இடம்பெறவில்லை.

அந்தப் பணிகள் முடிந்தவுடன் எஸ்க்க்ளுசிவ்வாக அந்த காட்சிகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதாவது யூடியூப் அல்லது ஒடிடி ஹாட்ஸ்டார் இல் வெளியிடுவதற்காக அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.

இந்நிலையில் கமலின் மீண்டும் அந்த இளமையான தோற்றத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். கமல் விக்ரம் படத்தில் அதே எனர்ஜியுடன் இருந்தாலும் இளமையாக எப்படி இருந்தார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மிக விரைவில் வேலைகள் முடிந்தவுடன் அந்த காட்சிகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.