நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை வேற லெவலில் நிரூபித்தார். அவரே எதிர்பார்க்காத அளவுக்கு அவருடைய விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
பல திரைப்படங்களின் சாதனையை முறியடித்து வசூல் வேட்டையாடிய அந்த திரைப்படம் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் கமல்ஹாசன் உட்பட படக்குழுவினர் அனைவரும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து மழையால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
தற்போது கமல் அந்த கொண்டாட்டங்களுக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதிலிருந்து வெளிவந்துள்ள ஆண்டவர் அடுத்ததாக என்னென்ன செய்ய வேண்டும் என்ற திட்டங்களையும் பக்காவாக போட்டுள்ளார். அதன்படி அவர் இப்போது அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தியன் 2 பட சூட்டிங்கில் கமல் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார். அதை தொடர்ந்து அவர் எடிட்டரும், இயக்குனருமான மகேஷ் நாராயணனுக்கும் தேதிகளை ஒதுக்கி கொடுத்துள்ளார்.
மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி இருக்கும் இவர் தமிழ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். அந்த வகையில் கமல்ஹாசன் இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்க இருக்கிறார்.
அந்த வகையில் ஆண்டவர் தற்போது பயங்கர பிசியாக மாறி இருக்கிறார். மேலும் மாதத்தில் பத்து நாட்கள் இந்தியன் 2 பட சூட்டிங்ிலும், அடுத்த பத்து நாட்கள் மகேஷ் நாராயணன் படத்திலும், அடுத்த பத்து நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் ஆண்டவரின் அதிரடி ஆட்டத்தை காண்பதற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.