மிஸ்கினை வாரி தின்ன கமல்.. கதை சொல்ல போனவருக்கு விழுந்த கொட்டு

Actor Kamal: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, படிப்படியாக தன் நடிப்பினை கொண்டு தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருப்பவர் தான் கமலஹாசன். இவரின் பிரம்மாண்ட படைப்பான விக்ரம் படத்திற்கு பிறகு இவரின் கால்ஷீட் கிடைக்காமல் சுற்றி வருகின்றனர் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.

இந்நிலையில் இவரிடம் கதை சொல்ல முயற்சித்த இயக்குனர் மிஸ்கினை சக்க போடு போட்டு உள்ளார் கமல். கமலைப் பொறுத்தவரை அனுபவம் ஜாஸ்தி அதை யாரும் மறுக்க முடியாது. தான் கடந்து வந்த சினிமா பயணத்தின் மூலம் அனுபவத்தை கற்றுக் கொண்ட மாபெரும் ஜாம்பவான்.

கமலுடன் ட்ராவல் பண்ண வேண்டும் என்றால் அதற்கு நாம் அவரை விட ஒரு படி மேலாக இருக்க வேண்டும். இவரின் அனுபவத்தின் முன் இயக்குனர்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. இவர் சினிமாவில் உள்ள சின்ன சிறு நுணுக்கங்களையும் ஆராய்ந்து கற்று வைத்துள்ளார். இவரிடம் போட்டி போட்டு வெல்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல.

இந்நிலையில் இவருக்கு கதை சொல்ல முயலும் இயக்குனர்கள் இவரை நெருங்கவே பயப்படுவார்கள். ஏனென்றால் கமலுக்கு சினிமாவில் தெரியாத விஷயமே இல்லவே இல்லை. மேலும் இந்த இயக்குனர் இந்த கதையை தான் எடுப்பார் என அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்.

இயக்குனர் மிஸ்கினை பொறுத்தவரை சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படங்களை எடுப்பதில் வல்லவர். இவர் மேற்கொண்ட படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், கமலை வைத்து முயற்சி செய்ய விரும்பி உள்ள இவர் கதையோடு கமலை பார்க்க சென்றாராம்.

ஓகே கதையை சொல்லுங்கள் என ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் போதும் நிறுத்துங்கள் இக்கதை ஹாலிவுட் படத்தில் வரும் காட்சி தானே என டக்குனு போட்டு உடைத்து விட்டாராம். மேலும் அதன்பின் இடம்பெறும் காட்சிகளையும் யூகித்து கூறியுள்ளார்.

அவ்வாறு மிஸ்கின் மனதில் தோன்றிய அனைத்தையும் அப்படியே அச்சடித்தது போல் கமல் ஒப்பித்துள்ளார். வேற ஏதாவது புது கதையாக இருந்தால் சொல்லுங்கள் என மிஸ்கினை பொட்டணம் கட்டி, விரட்டி அடித்து விட்டாராம். ஆகையால் இது போன்ற சம்பவத்திற்கு பின்பு இன்னும் முயற்சி செய்து வருகிறார் மிஸ்கின். மேலும் கமலை வைத்து படம் இயக்க ஒரு தனி திறமை வேண்டும்.