ஆண்டவருக்கு கொடுத்த பதவி.. கண்டுக்காமல் தூக்கிபோட்ட உலக நாயகன்

Actor Kamal : பொதுவாக சினிமாவில் உள்ள பிரபலங்கள் அரசியலில் அதிக நாட்டம் காட்டி வருகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற பல பிரபலங்கள் சினிமாவில் ஜெயித்த பிறகு தான் அரசியலில் இறங்கினர். அதேபோல் கமலும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி இருந்தார்.

இப்போது 2024ஆம் ஆண்டு தேர்தலில் கோயம்புத்தூரில் எம்பி பதவியில் நிற்க உள்ளார். இதனால் திமுக உடன் கூட்டணி போடுகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிஜேபி கமலை தன் பக்கம் வர வைக்க சில யுத்திகளை கையாண்டு வருகிறதாம். அதில் ஒன்றுதான் ஆண்டவருக்கு பதவி கொடுக்க முன் வந்திருக்கின்றனர்.

கமலுக்கு ராஜ்ய சபாவில் மெம்பர்ஷிப் சீட் கொடுக்க வந்து உள்ளனர். இதை கமலிடம் சொல்ல தனக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். எதுவாக இருந்தாலும் கமல் முன்கூட்டியே யோசித்து செயல்பட கூடியவர். பிஜேபியின் திட்டத்தை அறிந்து கமல் பதவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

மேலும் இப்போது கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்து உள்ள நிலையில் அடுத்ததாக மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாக உள்ள தக் லைஃப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கி மே மாதத்திற்கு உள்ளாகவே முடித்து விட வேண்டும் என்று கமல் கூறியுள்ளார்.

ஏனென்றால் படப்பிடிப்பை முடித்துவிட்டு முழுவதுமாக அரசியலில் ஈடுபட இருக்கிறார். ஒரு புறம் தயாரிப்பும் போய்க்கொண்டிருப்பதால் கமல் படு பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். ஆகையால் இந்த முறை அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கப் போகிறது.