மன்னிப்பு கேட்க முடியாது.. கமல் திட்டவட்டம்

Kamal : கமல் இப்போது தக் லைஃப் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். ஜூன் 5 படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்து கொண்டார்.

அவரைப் பற்றி கமல் சில விஷயங்கள் பேசி இருந்தார். அதாவது கர்நாடகாவில் இருக்கும் போது ராஜ்குமாரின் குடும்பம் என்னுடைய குடும்பம் தான். அவர் இப்போது எனக்காக இங்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும் பேச்சை நான் தொடங்கும் போதே உயிரே, உறவே, தமிழே என்று தான் தொடங்குவேன். ஏனென்றால் கன்னடம் தமிழ் மொழியில் இருந்து தான் தோன்றியது. அதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று கமல் பேசி இருந்தார்.

கன்னட அமைப்பினரிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிய கமல்

இதனால் கன்னட அமைப்பினர் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தனர். எவ்வாறு தமிழில் இருந்து கன்னட உருவானது என்று கூறுவீர்கள். தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியிட தடை செய்யப்படும் என எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

கமல் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இதை அடுத்து இன்று நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கமல் இது குறித்து பேசி இருக்கிறார். கர்நாடகாவில் இருந்து தன்னை விமர்சிப்பவர்களையும் என் குடும்பம் என்றே நான் கருதுகிறேன்.

இந்த கூற்றுக்கு என் பக்கத்தில் இருந்து பார்த்தால் அது சரியாகத்தான் தெரியும். உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் அது தவறாக தெரியும். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது, தமிழில் இருந்து தான் கன்னடம் தோன்றுகிறது என்பதற்கு மாற்று கருத்து இல்லை என்று கமல் கூறியிருக்கிறார்.