கமலுக்கும், சிம்புக்கும் இடையே உள்ள பகை.. இதை எதிர்பார்க்கலையே!

Kamal : மாநாடு படத்தில் இருந்தே சிம்புக்கு ஏறுமுகம் தான். அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்து வந்த நிலையில் இப்போது கமலுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்திருக்கிறார்.மணிரத்னம் இயக்கத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது.

சமீபத்தில் தக் லைஃப் படத்திலிருந்து ஒரு பாடல் வெளியானது. இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களின் ஃபேவரிட் பாடலாக மாறி இருக்கிறது. அதுவும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு தரமான நடனத்தை இந்த பாடலில் சிம்பு கொடுத்திருக்கிறார்.

இந்த சூழலில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர், கமல் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதேபோல் சிம்புவும் கமலை போல் வளர்ந்ததே சினிமாவில் தான். மேலும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் சிம்புவை நன்றாக கமல் கவனித்தார்.

மோதிகொள்ளும் கமல் சிம்பு

ஆனால் படத்தில் கமல், சிம்பு இருவரும் கழுத்தை நெறித்துக் கொள்ளும் அளவிற்கு சண்டை போட்டுள்ளனராம். தக் லைஃப் படத்தில் இவர்கள் இருவருக்கும் தான் பெரிய சண்டை நடக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆகையால் சிம்பு இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்க அதிக வாய்ப்புள்ளது. சமீபகாலமாக ஹீரோக்கள் வில்லன் அவதாரம் எடுத்து வருகிறார்கள். அதற்கு பிள்ளையார் சுழி போட்டது மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி தான்.

அதேபோல் சூர்யாவும் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது சிம்புவும் கமலுக்கு எதிராக நடித்திருக்கிறார். ஆகையால் தக் லைஃப் படம் தரமான சம்பவங்களுடன் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.