Thug Life: மணிரத்னம், கமல் கூட்டணியின் தக் லைஃப் இன்று வெளியாகி இருக்கிறது. சிம்பு , திரிஷா, அபிராமி என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.
ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது. அதேபோல் ஒரு மாதமாக விறுவிறுப்பான ப்ரமோஷன் நடந்தது. அதில் கர்நாடகா பிரச்சனை கூடுதல் விளம்பரமாக மாறிவிட்டது.
அதனாலேயே ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் படம் பற்றிய சில எதிர்பார்ப்புகள் ஆடியன்ஸ் மத்தியில் இருக்கிறது. அது பற்றி காண்போம்.
தக் லைஃப் எதிர்பார்ப்புகள்
ஏற்கனவே ட்ரைலர் வெளியாகி கதை இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு கணிப்பை கொடுத்து விட்டது. சிம்புவை சிறுவயதில் இருந்து கமல் வளர்கிறார்.
ஆனால் சிம்பு வளர்த்தவரின் இடத்திற்கு வர ஆசைப்படுகிறார். இதற்கு இடையில் திரிஷாவின் கதாபாத்திரம், கமல் யார் என பல கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கிறது.
கதை இப்படித்தான் இருக்கும் என்று நாம் நினைத்தாலும் கூட மணிரத்தினம் அப்படியெல்லாம் நம்மை யூகிக்க விட்டுவிட மாட்டார். நிச்சயம் படத்தில் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருக்கும்.
அதேபோல் த்ரிஷா கேரக்டரில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கும் என தெரிகிறது. மேலும் ஏ ஆர் ரகுமானின் மேஜிக் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் திரைக்கதை ஆண்டவரின் மிரட்டல் நடிப்பு சிம்புவின் கேரக்டர் என எதிர்பார்ப்புகள் நீண்டு கொண்டே போகிறது. அதை தக் லைப் பூர்த்தி செய்யுமா என்பது அடுத்தடுத்த விமர்சனங்கள் மூலம் தெரியவரும்.