ஜோடி போட்டு அமெரிக்கா பறக்கும் ரெண்டு பேர்.. 3னே நாளில் ஷங்கரை கழட்டி விட்டு கமல் செய்யப் போகும்

Actor Kamal: ஷங்கர் இயக்கத்தில் லைக்கா மற்றும் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்திற்கான மொத்த வேலையும் முடிந்த உடனேயே கமல் ஷங்கரை கழட்டிவிட்டு தரமான சம்பவத்தை செய்யப் போகிறார்.

இந்தியன் 2 படம் முடிந்து கையோட கமல் மற்றும் ஷங்கர் இருவரும் அமெரிக்கா செல்கின்றனர். இந்தியன் 2 பிரம்மாண்டமாக அங்கே உள்ள டெக்னாலஜியை வைத்துக் செதுக்குகின்றனர். இதற்கு மூன்று நாள் தேவைப்படுகிறது.

அந்த வேலை முடித்தவுடன் ஷங்கரை கழட்டி விடுகிறார் கமல். அதன் பின் ஒரு மாதமும் அமெரிக்காவில் டேரா போட்டு 30 வயதை குறைக்க திட்டமிட்டுள்ளார் உலகநாயகன். அடுத்த படத்திற்கு மிகவும் இளமையான தெனாலி பட கமல் போல் மாற திட்டம் போட்டிருக்கிறார்.

அது அமெரிக்காவில் எளிதாக பண்ணி விடுவார்களாம். கமலின் மவுசு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் இருக்கிறதே தவிர குறைய வாய்ப்பில்லை.கமல் அடுத்ததாக பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாக கலக்க போகிறார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ப்ராஜெக்ட் கே படத்திற்காகவும் அதன் தொடர்ச்சியாக ஹெச் வினோத் இயக்கும் KH233 படத்திற்காகவே தன்னை இளமையான தோற்றத்திற்கு கொண்டுவர பார்க்கிறார். அதற்காக தான் ஒரு மாதம் அமெரிக்காவில் செலவிடப் போகிறார்.

விக்ரம் படத்திலும் சரி தற்போது இருக்கும் கமலும் வயதான தோற்றம் தெரிவதால் முன்பை விட சினிமாவில் ஒரு ரவுண்டு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்காவில் தன்னுடைய வயதை பாதியாக மாற்ற போகிறார். கமல் அமெரிக்காவிலிருந்து வரும்போது அவரை 20 வருடத்திற்கு முன்பு எப்படி பார்த்தோமோ அப்படி பார்க்க போகிறோம்.