சிம்புவை விட்டுக் கொடுக்காத நாயக்கர் ஐயா.. 36 வருடங்களுக்கு பின் அஞ்சரை மணிரத்தினம் செய்த சம்பவம்

கடந்த ஒரு வாரமாக தக்லைப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி படுஜோராக போய்க் கொண்டிருக்கிறது. சிம்பு, கமல்ஹாசன், மணிரத்தினம் மூன்று பேரும் இறங்கி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கலைவாணர் அரங்கில் இந்த படத்தின் முதல் சிங்கிளான “ஜிங்கு ஜா” பாடல் வெளியாகி உள்ளது.

ஜரூராக நடைபெற்ற நிகழ்ச்சியில் கமலஹாசன் எந்த ஒரு இடத்திலும் சிம்பு மற்றும் மணிரத்தினம் இருவரையும் விட்டுக் கொடுக்கவே இல்லை. பிரஸ் மீட்டில் கூட சிம்புவை முதலாவதாக அனுப்பிவிட்டார் கமலஹாசன் அதேபோல் சாப்பிடும் பந்தியில் கூட மணிரத்தினத்தை பார்த்து பார்த்து கவனித்து வருகிறார்.

36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மணிரத்தினத்துடன் இணைகிறார் கமலஹாசன். 10 தல படத்தில் ஏ ஜி ஆர் ஆக நடித்த சிம்புவிற்கு மீண்டும் தன்னை நிரூபிக்க தரமான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இந்த படத்தில் கமலுக்கு நிகரான கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார் எஸ் டி ஆர். நிகழ்ச்சியில் பேசிய கமல் இயக்குனர் மணிரத்தினத்திற்கு, அஞ்சரை மணி ரத்தினம் என பெயர் சூட்டியதாக கலாய்த்து தள்ளினார்.

காலையில் அஞ்சரை மணிக்கெல்லாம் முதல் ஆளாக வந்து சூட்டிங் ஸ்பாட்டை பரபரப்புக்கு உள்ளாகி விடுவாராம். அதனால் தான் இவருக்கு அந்தப் பெயர். இந்த படத்தில் ராஜஸ்தானில் பகுதியில் வாழ்ந்த கொள்ளைக்காரர்கள் தக்கர்கள். அவர்கள் வழிப்போக்கர்களை கொள்ளையடிப்பார்கள் இதைப் பற்றிய கதைதான் என்கிறார் பத்திரிக்கையாளர் ஒருவர்.

அந்த தக்கர்கள் கூட்டத்தில் இருப்பவர் கமலா அல்லது அவர்கள் கொட்டத்தை அடக்கிய கலெக்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளாரா என்பதுதான் இந்த படத்திற்கான கேள்விக்குறி. சுமார் 36 வருடங்களுக்குப் பின் இணையும் கூட்டணி நிச்சயமாக சம்பவம் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.