Actor Kamal: 30 வருடங்களுக்கு முன்பு கமல் நடிப்பில் வெளிவந்து இப்போதும் மனதில் நிற்கும் ஒரு படம் தான் தேவர்மகன். எந்த அளவுக்கு இப்படம் பாராட்டுகளை பெற்றதோ அதே அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்தது. தற்போது இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இப்படம் சாதி வெறியை தூண்டுகிறது என்ற சர்ச்சைகளுக்கு ஆளாகி இருக்கிறது.
இதை ஆரம்பித்து வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படம் குறித்த தன்னுடைய விமர்சனங்களையும் கமல் முன்பாகவே முன் வைத்தார். இப்படி குற்றம் சாட்டும் அளவுக்கு இப்படம் உண்மையில் சாதிய வெறியை தூண்டியதா என்ற விவாதங்கள் தான் இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதன்படி தேவர் மகன் படத்தில் வரும் போற்றி பாடடி பாடல் சாதி பெருமையை பேசுபவர்களுக்கு முக்கியமான பாடலாக இருக்கிறது. இதை வைத்து சில வன்முறைகள் நடந்ததையும் மறுக்க முடியாது. ஆனால் அதை பிடித்துக் கொண்டு கமல் தான் இதற்கு முழு காரணம் என்று மாரி செல்வராஜ் கூறுவது எந்த விதத்தில் நியாயம்.
அதை தற்போது அலசி ஆராய்ந்து வரும் ரசிகர்கள் கமல் இதற்காக கொடுத்த ஒரு விளக்கத்தையும் இப்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது இப்படி ஒரு பிரச்சனை வரும் என எதிர்பார்த்து இந்த பாடலை வைக்கவில்லை என கூறிய கமல் வாலியின் சார்பாக நானும் இளையராஜாவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் எனவும் கூறியிருந்தார்.
மேலும் மதுவிலக்கை பற்றி படம் எடுக்க வேண்டும் என்றால் கதாநாயகன் மது அருந்துவது போல் காட்டி தான் அந்த நியாயத்தை சொல்ல வேண்டும். அதுதான் ஒரு அழுத்தமான செய்தியை கொண்டு செல்லும். அதற்காகத்தான் அப்படி காட்சிப்படுத்தப்படுகிறது. இதை புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மாற்றம் கிடைக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
இதன் மூலம் தேவர்மகன் படத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கும் பலருக்கு அவர் சவுக்கடி பதிலை கொடுத்திருக்கிறார். அது மட்டுமின்றி தேவர் மகன் வன்முறைக்கு எதிரான ஒரு படம் தான். அதனால்தான் கிளைமாக்ஸ் காட்சியில் சக்திவேல் கதாபாத்திரம் போய் புள்ளைங்கள படிக்க வைங்க என்று கூறுவார். இதை சரியாக புரிந்து கொண்டாலே பல விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
ஆனால் அதை செய்யாமல் மாரி செல்வராஜ் மேடையில் இதை இழுத்து பேசி இருப்பது தன்னுடைய படத்தை ஓட வைப்பதற்கான ஒரு ப்ரமோஷனாகவே இருக்கிறது. இப்படி அவர் சாமர்த்தியமாக காய் நகர்த்தி இருந்தாலும் கமல் அதற்கு எப்போதோ கூறிய பதில் இவருக்கான ஒரு சவுக்கடியாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது கமல் ரசிகர்களிடம் சிக்கி சின்ன பின்னமாகி கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் மூலம் இன்னும் என்னென்ன சர்ச்சைகள் சந்திக்க இருக்கிறாரோ தெரியவில்லை.