அரசியல் ஆதாயத்திற்காக மௌன சாமியாரான கமல்.. சாதி சர்ச்சையால் கொந்தளித்த விஜய் பட இயக்குனர்

Actor Kamal: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவை கமல் பற்றிய செய்திகள் தான் அதிகமாக ஆக்கிரமித்துள்ளது. அதிலும் இப்போது அவர் அரசியல் ஆதாயத்திற்காக மௌன சாமியாராக இருக்கிறார் என விஜய் பட இயக்குனர் ஒருவர் விமர்சித்திருப்பது பரப்பரப்பை கிளப்பி இருக்கிறது.

சமீபத்தில் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜின் பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியது. உலகநாயகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அந்த நிகழ்வில் அவருக்கு முன்பாகவே இயக்குனர் தேவர் மகன் பற்றிய தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக முன் வைத்தார்.

அதிலும் ஜாதி பிரச்சனைக்கும், கலவரத்திற்கும் அப்படம் காரணமாக அமைந்தது என்றும், கமல் தான் அதற்கெல்லாம் பொறுப்பு என்றும் இயக்குனர் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு கமல் ரசிகர்கள் உட்பட பலரும் இயக்குனருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் கூட அந்த பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. அந்த வகையில் விஜய்யை வைத்து பல படங்களை இயக்கியிருக்கும் பேரரசு கமல் தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் சினிமா வியாபாரத்திற்காகவும் அமைதி காத்து வருவதாக விமர்சித்துள்ளார். மேலும் அவர் தான் ஒரு கலைஞன் என்பதை மறந்து விட்டு அரசியல்வாதியாகவே மாறிவிட்டார்.

ஏனென்றால் மேடையில் தன்னை பற்றிய ஒரு விமர்சனம் வரும்போது அதற்கு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டியது ஒரு கலைஞனின் கடமை. அதை விட்டுவிட்டு கமல் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். இதையே ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.

kamal-memes
kamal-memes

அதாவது இந்த பிரச்சனையால் பொங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களை, நான் எப்படி அமைதியாக இருக்கிறேனோ அப்படியே நீயும் இரு என கமல் சொல்வது போல் அந்த மீம்ஸ் இருக்கிறது. இப்படி ஆளாளுக்கு இந்த பிரச்சனை குறித்து விமர்சித்து வரும் நிலையில் ஆண்டவர் முறையான ஒரு விளக்கத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.