நடிப்பு அரக்கன், நடிப்பு ராட்சசன் என்று பெயர் வாங்கியவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். இவருடைய கண்ணை பார்த்து நடிப்பதற்கே சக நடிகர், நடிகைகள் பயப்படுவார்கள். மேலும் திரையில் இவர் எத்தனை பேருடன் நடித்தாலும் கமல் தான் ஸ்கோர் செய்வார்.
ஆனால் கமல்ஹாசன் ஒரு நடிகையை பார்த்து பயந்து பயந்து நடிப்பாராம். அதுமட்டுமின்றி அந்த நடிகையை நடிப்பு ராட்சசி என்று கமலே பாராட்டியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த நடிகையுடன் நடிக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக நடிக்க வேண்டும் என்றும் சில சமயங்களில் தன்னையே ஓவர் டேக் செய்துவிடுவார் என்று கமல் கூறியுள்ளாராம்.
இந்த விஷயத்தை கமலின் நண்பரான கிரேசி மோகன் முன்பு ஒரு வீடியோவில் பகிர்ந்து உள்ளார். அதாவது கமலஹாசன் பல நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதில் கமலே பார்த்து பயப்படும் நடிகை என்றால் அது ஊர்வசி தான். தன்னுடைய நகைச்சுவையான நடிப்பால் இப்பவும் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் ஊர்வசி.
அதுவும் ஆர் ஜே பாலாஜியுடன் இவர் நடிக்கும் படங்களுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்த வருகிறது. இவருடைய கலகலப்பான பேச்சு மற்றும் சிரிப்பு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் ஊர்வசி கமலுடன் இணைந்து மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் படங்களில் நடித்துள்ளார்.
இந்த இரு படங்களிலும் கமலே ஆச்சரியப்படும் அளவிற்கு சொந்தமாக வசனங்களை பேசி அடித்து தூள் கிளப்பிவிட்டாராம். ஆகையால் இவருடன் நடிக்கும் போது பார்த்து தான் நடிக்க வேண்டும் இல்லையென்றால் நம்மளை ஸ்கோர் செய்து விடுவார் என்று கமல் பயந்துள்ளாராம்.
அந்த அளவு நடிப்பு என்று வந்துவிட்டால் ஊர்வசி எதுவும் பார்க்காமல் அதிலேயே அப்படியே ஒன்றிவிடுவாராம். அதுமட்டுமின்றி உலகநாயகனிடம் இப்படி ஒரு பெயர் வாங்குவது சாதாரண விஷயம் அல்ல. மேலும் ஊர்வசி தொடர்ந்து பல படங்களில் நடித்து மகிழ்விக்க வேண்டும் என்ற அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.