திரும்பத் திரும்ப நான் ஒரு பெரிய மனுஷன் என நிரூபிக்கும் கமல்.. விருது விழாவில் வாயடைக்க வைத்த சம்பவம்

திரையுலகை பொருத்தவரை பலருக்கும் ஒரு ரோல் மாடலாகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர் தான் உலக நாயகன். நடிப்பின் மீது இவருக்கு இருக்கும் தீராத காதல் அனைவருக்கும் தெரியும். அதேபோன்று சக கலைஞர்களை கை தூக்கி விடுவதிலும் இவருக்கு நிகர் இவர் மட்டுமே.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் கமல் செய்த ஒரு விஷயம் பலரையும் வாயடைக்க செய்திருக்கிறது. அதாவது பிரபல பத்திரிகையின் சார்பில் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகையுமே ஸ்தம்பிக்க வைத்தது.

இந்த வயதிலும் நடிப்பை ஒருவரால் இந்த அளவுக்கு நேசிக்க முடியுமா என்னும் அளவுக்கு கமலின் நடிப்பு இருந்தது. அதை பெருமைப்படுத்தும் விதமாக கொடுக்கப்பட்ட அந்த விருதை மேடையில் வாங்கிய அவர் அடுத்ததாக செய்த ஒரு விஷயம் தான் யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. அதாவது அவர் அந்த விருதை வாங்கிக் கொண்டு இது எனக்கு மட்டும் சொந்தம் கிடையாது இன்னும் சிலருக்கும் இது சொந்தம் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து விக்ரம், மாதவன், தனுஷ், சிம்பு, கருணாஸ், கார்த்தி, விக்ரம் பிரபு, உதயநிதி ஸ்டாலின், அசோக் செல்வன் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டார். மேலும் இவர்கள் அனைவரும் இந்த விருதுக்காக எதிர்பார்த்து, நடித்து போட்டியிட்டுள்ளனர். அதனால் இவர்களுடன் சேர்ந்து இந்த விருதை நான் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறினார்.

இதை எதிர்பார்க்காத பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். உண்மையில் இந்த மனசு யாருக்கும் வராது. அந்த வகையில் நான் என்றுமே ஒரு பெரிய மனுஷன் தான் என்பதை கமல் மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார். அவருடைய இந்த செயல் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

பொதுவாகவே இவர் சக நடிகர்களை வளர்த்து விடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார். அதனாலேயே பெரிய ஹீரோ என்ற கர்வம் இல்லாமல் தன்னுடைய படத்தில் மற்ற ஹீரோக்களையும் நடிக்க வைத்து அழகு பார்ப்பார். இதுவே அவரிடம் இருக்கும் ஒரு தனித்துவம். அந்த வகையில் தற்போது கடந்த வருடம் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்களை அவர் பாராட்டியது ஒரு நல்ல முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளது.