கமல் இப்போது நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். சிம்பு, சிவகார்த்திகேயனை தொடர்ந்து அடுத்ததாக ரஜினியை வைத்துக் கூட அவர் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் இவரின் தலையிட்டால் தான் என்னுடைய படம் தோல்வி அடைந்தது என ஒரு இயக்குனர் வருத்தத்துடன் புலம்பியுள்ளார்.
துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் அடிவைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் ராஜேஷ் எம் செல்வா. இவரின் தயாரிப்பில் 2015ல் கமலஹாசன், திரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளிவந்த படம் தான் தூங்காவனம். இப்படம் ஒரே ஆண்டில் தெலுங்கிலும், தமிழிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வெளிவந்து 7 வருடங்கள் ஆகிய நிலையில் தற்போது இப்பட தோல்விக்கு கமல் தான் காரணம் என்று தன் கருத்தினை முன் வைத்து வருகிறார் செல்வா. அதாவது இப்படத்தில் கமலஹாசன் உடன் திரிஷா நடித்திருப்பார். ஆனால் உண்மையில் ஸ்ருதிஹாசன் தான் அந்த ரோலில் நடிக்க இருந்ததாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அதன்பின் கமல் அவர்கள் இந்த ரோலுக்கு ஸ்ருதி சரி வராது என்றும் த்ரிஷாவை நடிக்க வைக்கலாம் என தம்மிடம் கூறியதாகவும் கூறியுள்ளார். ஏனென்றால் கமல் மற்றும் சுருதிஹாசன் இருவரும் எதிரும் புதிருமாக இருக்கும் படி தான் கதை உருவாக்கப்பட்டிருந்ததாம். ஆனால் கமல் கதையை வேறு விதமாக கொண்டு செல்ல வேண்டும் என்று தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதுவே இப்பட தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று தற்போது இயக்குனர் தன் வருத்தத்தை முன் வைத்துள்ளார். இப்படத் தொடக்கத்தில் தான் இயக்கிய ஸ்கிரிப்டில் இப்படம் வெளிவந்திருந்தால் கண்டிப்பாக மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும்.
ஆனால் கமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்றும் திரிஷா தான் நடிக்க வேண்டும் என்றும் கூறியதால் படம் தோல்வியடைந்து விட்டது என இயக்குனர் தெரிவித்துள்ளார். தற்போது ஏழு வருடங்களுக்குப் பின் வெளிவந்துள்ள இந்த விஷயம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மேலும் குந்தவைக்காக பெத்த மகளையே கமல் ஓரங்கட்டி விட்டாரா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.