பிக் பாஸ் மேடையில் அரசியல் பேசும் கமல்.. அண்ணா, எம்ஜிஆர்-யை ஒப்பிட்டு அசத்திய ஆண்டவர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களாக கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அவரைத் தவிர யாராலும் இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக கொண்டு செல்ல முடியாது. பிக் பாஸ் மேடையில் கமல் அரசியல் பற்றியும், தனது கட்சியை பற்றியும் நிறைய பேசியுள்ளார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் இதை ஒரு யுக்தியாக கமல் பயன்படுத்திக் கொள்வதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் நேரடியாகவே பிக் பாஸ் மேடையில் அரசியல் பேசுவதை பற்றி கமலிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அண்ணா பல மேடைகளில் அரசியலைப் பற்றி பேசியுள்ளார். அதுமட்டுமின்றி நான் ஆணையிட்டால், அதுநடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்கள் என்று எம்ஜிஆர் ஒரு படத்தில் பாடுகிறார். அந்த படத்தை எம்ஜிஆர் தயாரிக்கவில்லை. இவ்வாறு பலர் தங்களுக்கு எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அதை பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

அதேபோல் தான் கமல்ஹாசனையும், மக்கள் நீதி மையம் கட்சியையும் பிரித்து பார்க்க முடியாது. எங்கு தனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு மக்களுக்கான பிரச்சனையை எடுத்து வைப்பேன் என ஆண்டவர் தடாள அடியான பதிலை கூறி அசர வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி பிக் பாஸ் மேடையில் போட்டியாளர்கள் தப்பு செய்தால் சரியான நேரத்தில் கமல் கண்டிக்கவும் செய்கிறார். அதேபோல் நல்லது செய்தால் கட்டிக் கொடுத்து பாராட்டவும் செய்கிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் சிறந்த புத்தகத்தை பற்றிய விஷயங்களை கூறி பிக் பாஸ் ரசிகர்களுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்து வருகிறார்.

இந்நிலையில் கமல் தற்போது சினிமாவிலும் முழு வீச்சாக செயல்பட்டு வருகிறார். இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டு வரும் நிலையில் விரைவில் மணிரத்னம் இயக்கும் படத்து நடித்திருக்கிறார். மேலும் சினிமாவை போல் அரசியலிலும் தனது முழு பங்களிப்பையும் கமல் கொடுக்கவிருக்கிறார்.