போட்டியாளர்களின் புடுங்கள் தாங்காமல் ஓட்டபிடிக்கும் கமல்.. அடுத்த பிக்பாஸ் அல்டிமேட் ஹோஸ்டிங் யார் தெரியுமா?

விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சி முதல் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியையும் திறன்பட தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமலஹாசன் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் ஒவ்வொரு வாரமும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்க்க தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் கமல், அதில் இருந்து விலகப் போவதாகவும், இந்த வார எபிசோட் தான் அவர் கடைசியாக பங்கேற்கும் எபிசோட் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பிஸியாக இருந்து கொண்டிருக்கும் கமல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி தொடர மாட்டார் என காரணம் சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் அல்லது சரத்குமார் இருவரில் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக தெரிகிறது.

ஏற்கனவே கமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ரம்யாகிருஷ்ணன் அவருக்கு பதில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எனவே அவரே மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்பிருக்கிறது.

அதைப்போல் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தில் பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்த சரத்குமார் தற்போது மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆகையால் இவர்கள் இருவருள் யார் அடுத்தபடியாக கமல் இடத்தை நிரப்பப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். அத்துடன் கமல் , பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகப் போகிறார் என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராமல் இருக்கும் நிலையில், இது வதந்தியா அல்லது உண்மையா என கூடிய விரைவில் தெரிந்துவிடும்.